எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’எச்.ராஜா மகள் திருமணத்தில் புனித சிலையை பரிசளித்த அர்ஜூன் சம்பத்,’’ என்ற பெயரில் பரவி வரும் ஒரு அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், செக்ஸ் பொசிஷன் ஒன்றின் புகைப்படத்தை அர்ஜூன் சம்பத், எச். ராஜா மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பரிசளிப்பது போல பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்த பதிவின் கமெண்ட்களில் எச்.ராஜாவின் பார்வையை பாருங்க என்றெல்லாம் கூறி இது எதோ உண்மையான புகைப்படம் போல பரப்ப முயற்சித்துள்ளனர். மேலும் சிலர் இது வீண் செயல் என்றும் எச்சரித்திருந்ததை காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
இந்து மக்கள் கட்சியின் தலைவராக உள்ள அர்ஜூன் சம்பத் அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அடிக்கடி விமர்சிக்கப்படுவது வழக்கம். அதுபோலவே, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீப காலமாக, சமூக வலைதளங்களில் அதிகமான வதந்திகளால் குறி வைத்து தாக்கப்படுகிறார். இதுதவிர, சமீபத்தில்தான் எச்.ராஜாவின் மகள் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து கூறியிருந்தனர். இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

அந்த பதிவில் உள்ள கமெண்ட்களை ஒருமுறை விரிவாகப் படித்து பார்த்தோம். அப்போது, இதுதொடர்பான உண்மையான புகைப்படத்தை ஒருவர் கமெண்ட்டில் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு, எச்.ராஜா அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், தனது மகள் திருமணம் தொடர்பாக ஏதேனும் பதிவு வெளியிட்டுள்ளாரா என தகவல் தேடினோம். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சில புகைப்படங்களை தொகுத்து வெளியிட்டிருந்த விவரம் காண கிடைத்தது. அதில்தான் மேற்கண்ட புகைப்படத்தின் உண்மையான தோற்றமும் இடம்பெற்றுள்ளது. 

Facebook LinkArchived Link

இதில் நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தை ஆதாரத்திற்காக தனியே கீழே இணைத்துள்ளோம். 

Facebook LinkArchived Link 

அரசியல் காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூக ஊடகங்களின் வரவால் பலரது விமர்சனம் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு. எச்.ராஜா மட்டுமல்ல, யாராக இருந்தாலும் சரி, ஒருவரின் மகள்/மகன் திருமணத்தை இழிவுபடுத்தும் வகையில் இத்தகைய செயலை செய்வது மிகவும் அநாகரீகமானதாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

Comments are closed.