
‘’ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பற்றி விரிவாக விவரித்துள்ளதோடு, அதுதொடர்பான புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான வன உயிரினங்கள் உடல் கருகி உயிரிழப்பதும், வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பதும் உண்மைதான். அத்துடன், ஆயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த நாடே மிகப்பெரும் அபாயத்தில் சிக்கியது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த வன உயிரினங்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் ஏராளமான புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல புகைப்படங்கள் மிகவும் பழையது ஆகும். இதுபற்றி நமது Marathi Fact Crescendo பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதனை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
உதாரணமாக, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து, அது எப்போது எடுக்கப்பட்டது என விவரங்களை சரிபார்த்தோம்.
இதில் உள்ள புலிகள் காட்டுத் தீயில் எரிவது போன்ற புகைப்படம், 2012ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது, உண்மையில் இந்தோனேசியா நாட்டில் நிகழ்ந்த காட்டுத் தீயின்போது எடுக்கப்பட்டதாகும்.

புகைப்படம் 2:
இதுவும் 2012ம் ஆண்டு முதலே இணையத்தில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை தெரியாமல் பலர் ஆஸ்திரேலியா காட்டுத் தீ பற்றிய புகைப்படம் எனக் கூறி பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த புகைப்படமும் தற்போதைய காட்டுத் தீயின்போது எடுக்கப்பட்டது கிடையாது. இது, 2019 நவம்பர் மாதம் முதலாகவே இணையத்தில் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஆதரவின்றி தவித்த கங்காரு குட்டியை கடந்த 2013ம் ஆண்டு வன உயிரின ஆர்வலர்கள் மீட்டு, கங்காரு பூங்காவில் சேர்த்தனர். இதன்பேரில், அவர்களிடம் தனது நன்றியை பார்க்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்து வெளிப்படுத்துவது இந்த கங்காருவின் வாடிக்கையாகும். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவும், 2017ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வரும் புகைப்படமாகும். அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்த பசு மாட்டின் சடலம் இது.

புகைப்படம் 5:
பழைய புகைப்படம்; மேலே மூன்றாவதாக உள்ள புகைப்படத்தின் மற்றொரு வெர்ஷன்தான் இதுவும்.
புகைப்படம் 6:
இது உண்மைதான். தற்சமயம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் அணைக்க முயன்றபோது எடுக்கப்பட்டதாகும். இதேபோல, புகைப்படம் 7, 8, 9, 10, 11, 12 ஆகிய புகைப்படங்களும் உண்மைதான்.
ஆனால், புகைப்படம் 13 அமெரிக்காவில் நிகழ்ந்த காட்டுத் தீ சம்பவத்துடன் தொடர்புடையதாகும். புகைப்படம் 14 கடந்த 2016ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த காட்டுத் தீயின்போது எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
புகைப்படம் 15, கலிஃபோர்னியாவில் 2018ம் ஆண்டு நிகழ்ந்த காட்டுத் தீயின்போது எடுக்கப்பட்டதாகும்.
புகைப்படம் 16 மற்றும் புகைப்படம் 17 போன்றவை கூகுளில் கிடைக்கப்பெறும் வால்பேப்பர் ஆகும். இவற்றுக்கும், தற்போதைய ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
புகைப்படம் 18 கலிஃபோர்னியாவின் பட் கவுன்டி பகுதியில் 2018ம் ஆண்டு எடுத்ததாகும். புகைப்படம் 19ம் பழையதுதான்.
புகைப்படம் 20, 21, 22, 23 போன்றவை தற்போதைய ஆஸ்திரேலிய காட்டுத் தீயுடன் தொடர்புடையவை ஆகும்.
புகைப்படம் 24, தற்போது எடுக்கப்பட்டது அல்ல. இது 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
புகைப்படம் 25 உண்மையானதுதான். இதேபோல, மற்ற புகைப்படங்களும் காணப்படுகின்றன.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாதி உண்மையான புகைப்படங்கள் மற்றும் பாதி பழைய புகைப்படங்களை கலந்து, ஆஸ்திரேலிய காட்டுத் தீயுடன் சேர்த்து வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த பதிவில், பாதி உண்மை, பாதி தவறான புகைப்படங்கள் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகளின் புகைப்படம்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
