‘’எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

MKS For CM

எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்கின்றனர். இதேபோல, மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் இதே புகைப்பட பதிவை பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.

Facebook Claim Link Archived Link

உண்மை அறிவோம்:
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆதரித்து, தமிழகம் முழுக்க பாஜக.,வினர் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

Dailythanthi News LinkBBC Tamil News Link

டிசம்பர் 20ம் தேதி நடைபெற்ற இப்போராட்டத்தை கேலி, கிண்டல் செய்து பலர் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்தனர். அதன் ஒருபகுதியாகவே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. ஆனால், அது கேலி கிண்டல் என்பதை மீறி, தனிப்பட்ட அரசியல் விரோதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், எச்.ராஜாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என விஷமத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.

எனவே, மேற்கண்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை கண்டறியும் வகையில், அதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது.

இதுபற்றி பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள புகைப்படத்தை எடுத்து, மார்ஃபிங் செய்து, மேற்கண்ட வகையில் தகவல் பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது.

SG Surya Twitter PostArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா?

Fact Check By: Pankaj Iyer

Result: False