‘’கார்த்திக் கோபிநாத் குகைக்குள் தங்கி நிர்வாண பூஜை செய்கிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இதனை பலரும் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் கோயில் பராமரிப்புப் பணிகளுக்காக பொது மக்களிடம் இருந்து நிதி வசூல் செய்து, மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் யூடியுபர் கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Times Now News Link I The Hindu Link

இந்த சூழலில், கார்த்திக் கோபிநாத் தற்போது குகை ஒன்றில் பதுங்கி, சட்ட பிரச்னைகளில் இருந்து வெளிவரும் நோக்கில் நிர்வாண பூஜை செய்வதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட நியூஸ் கார்டை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மையில், இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் அந்த டிவி சேனலின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். இதேபோன்று, பாஜக ஐடி பிரிவு தரப்பில் பேசியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கார்த்திக் கோபிநாத் குகைக்குள் நிர்வாண பூஜை செய்வதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False