ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்: உண்மை அறிவோம்!

சமூக வலைதளம் பொழுதுபோக்கு

‘’ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Link Archived Video Link

Angel Media எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பாடும் வீடியோவை பகிர்ந்து, அதன் மேலே, சீன பெண் தமிழில் பாடும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் உள்ள பெண் உண்மையில் சீனாவைச் சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இதுபற்றி விரிவான தகவல்களை தேடினோம். அப்போது, நமது மலையாள டீமைச் சேர்ந்த ஒருவர் இதேபோன்ற தகவல் மலையாள மொழியிலும் பரவி வருவதாக தெரிவித்தார். அந்த ஃபேஸ்புக் பதிவின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Facebook Link Archived Link 

இதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரி கம பா என்ற நிகழ்ச்சி இசை ஆர்வலர்களிடையே பிரபலமான ஒன்றாகும். இதில்தான் மேற்கண்ட போட்டியாளர் பங்கேற்று பாடியுள்ளார். அவரைப் பற்றி தகவல் தேடியதில், அப்பெண் சீனர் இல்லை என்றும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், அவரது பெயர் Krishangi என்றும் தெரியவந்தது. 

Zee Tamil Link 1Zee Tamil Link 2Zee Tamil Link 3

இதுதவிர கிருஷாங்கி பற்றி ஜீ தமிழ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் இணைப்பும் கீழே தரப்பட்டுள்ளது. 

Zee Tamil Instagram Post LinkArchived Link 

இவர் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுளில் Zee Tamil Krishangi என்ற கீ வேர்ட் பயன்படுத்தி தேடினால் பார்க்கலாம். அவரது அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தின் இணைப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 

இவர் தொடர்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஒன்றை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல மற்றொரு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நாம் ஆய்வு செய்யும் வீடியோவின் முழு வீடியோவும் கீழே பகிரப்பட்டுள்ளது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் பாடகியை சீனாக்காரர் எனக் கூறி ஃபேஸ்புக்கில் தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False