
‘’மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

FB Link 1 | Archived Link 1 | FB Link 2 | Archived Link 2 |
மேற்கண்ட வரைபடத்தில் முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு பகுதிகளாக எல்லை பிரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் வட எல்லையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று அறிவித்தது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் கடந்துள்ளன.
இதுபற்றி TheNewsMinute வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2, 2019 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக, இந்தியாவின் புதிய வரைபடம் சுழற்சியில் விடப்பட்டது. இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதுபற்றி பல்வேறு முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
Puthiyathalaimurai News Link | Archived Link |
Times of India Link | Archived Link |
IndiaToday News Link | Archived Link |
இதன்படி, இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது உண்மைதான். ஆனால், அந்த வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லை அளவு சற்று பெரியதாகவும், ஜம்மு காஷ்மீர் எல்லை அளவு குறுகலாகவும் உள்ளது. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் வரைபடத்திலோ, இது அப்படியே தலைகீழாக, ஜம்மு காஷ்மீர் பெரியதாகவும், லடாக் சிறியதாகவும் உள்ளது. இவ்விரு வரைபடங்களையும் நமது ஆய்விற்காக ஒப்பீடு செய்து கீழே அளித்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: Partly False
