பரவை முனியம்மா மரணம்: பரபரப்பை கிளப்பும் வதந்தி

சமூக வலைதளம் சினிமா

‘’பரவை முனியம்மா மரணம்,’’ என்ற பெயரில் கடந்த 2 நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வதந்தியை பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:

Facebook Link Archived Link 

NiCe JoKe, SiripeY VarLa எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல நக்கீரன் இணையதளமும் இதே செய்தியை பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது.

உண்மை அறிவோம்:
தமிழ் நாட்டுப் புறப் பாடல்கள் பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா. இதன் உச்சமாக, தமிழ் சினிமா படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்தும் உள்ளார். தற்சமயம் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ஏற்கனவே புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட வீடியோ செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இப்படி அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்தான் மேற்கண்ட வதந்தி பரவி வருகிறது. ஆனால், இதில் உண்மையில்லை. சமூக ஊடகங்களில் இத்தகைய வதந்தி பரவியதை தொடர்ந்து, பரவை முனியம்மாவை நேரில் பேட்டி கண்டு, தமிழ் தொலைக்காட்சிகள் பலவும் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளன. அதில் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.

84 வயதாகும் பரவை முனியம்மா, தற்போது மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கமும் அளித்துவிட்டது. இந்த செய்தியை முன்னணி ஊடகங்களும் பிரசுரித்துள்ளன.

TOI News Link NewIndianExpress Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பரவை முனியம்மா மரணம்: பரபரப்பை கிளப்பும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •