‘’மாசா குளிர்பானத்தில் எச்ஐவி ரத்தம் கலந்துள்ளது,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Post Link Archived Link

Hari Ram

என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த 2015, ஆகஸ்ட் 19 அன்று வெளியிட்டுள்ளது. இதுபோலவே பலரும் இச்செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
ஏற்கனவே பொவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி வைரஸ் கலந்துள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு நடத்தி, அது தவறு என நிரூபித்திருக்கிறோம். நமது செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil News Link

இதன்படி, பொவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி உள்ளது எனப் பகிரப்படும் வதந்தியின் முந்தைய வெர்ஷன்தான் இந்த மாசா குளிர்பானத்தில் எச்ஐவி உள்ளதாகக் கூறும் வதந்தி. 2018 வரை பகிரப்பட்ட இந்த வதந்தியை தற்போது பெயரை மட்டும் மாற்றிவிட்டு பொவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி எனக் கூறி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில் மாசா குளிர்பானத்தில் எச்ஐவி உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் இதுபற்றி ஊடகங்கள் பலவும் ஆய்வு செய்து, செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

NewIndianExpress Story Link Researchgate.in Link

இதுதவிர எச்ஐவி கிருமியால் மனித உடல் தவிர வேறு எதிலும் நீண்ட நேரம் உயிர்வாழ முடியாது. மனிதனில் இருந்து மற்றொரு மனிதனுக்கு ரத்தம், விந்து, இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்டவை வழியாகவே எச்ஐவி பரவும். நீர், குளிர்பானங்கள் போன்றவற்றின் வழியாக பரவ வாய்ப்பில்லை.

இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மாசா குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது: ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer

Result: False