போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?

சமூக வலைதளம் வர்த்தகம்

‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Sekaran Periyasamy

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 14ம் தேதியன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’போவண்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் ரத்தம், அதன் பாட்டிலில் கலந்துவிட்டது. அவர் எச்ஐவி பாதித்தவர் என்பதால் போவண்டோ குளிர்பானங்களை யாரும் வாங்க வேண்டாம். இதுபற்றி NDTV நேற்று செய்தி வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறியுள்ளார். இதே தகவலை பலரும் பகிர்வதை காண நேரிட்டது. 

உண்மை அறிவோம்:
இதன்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி 2019 அக்டோபரில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதே செய்தி 2018ம் ஆண்டிலும் நிறைய பேர் பகிர்ந்துள்ளதாக, தெரியவருகிறது. எனவே, இந்த தகவல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பரவுவது உறுதியாகிறது.

உண்மை என்னவெனில், போவண்டோ நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வதந்தியாகும். இதே வதந்தி ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மாஸா குளிர்பான நிறுவனத்திற்கு எதிராகவும் பரப்பப்பட்டது. அதில் இருந்த மாஸா பெயரை மட்டும் மாற்றிவிட்டு வேறு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தகவல் பகிர்ந்துள்ளதை காணலாம்.

Facebook Link Archived Link 

இரண்டு தகவல்களுமே ஒன்றுதான். குளிர்பான நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது. இதைவிட ஒரு உண்மை என்னவெனில், எச்ஐவி கிருமி ஒருவருக்கு தொற்றிவிட்டது எனில், அவரது ரத்தம் அல்லது விந்து அல்லது ஆண், பெண் உறுப்பு வழியாக மற்றவர்களுக்கு பரவ நேரிடும், ஆனால், மனித உடல் தவிர வேறு எதிலும் நீண்ட நேரம் எச்ஐவி கிருமியால் உயிர் வாழ முடியாது. மனித உடலை விட்டு இன்னொரு மனித உடலுக்குள் சென்றால்தான் பிரச்னை, மாறாக குளிர்பானம் அல்லது ஏதேனும் திரவப் பொருட்களில் எச்ஐவி கிருமி கலந்துவிட்டால், அதனால் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது, உடனடியாக இறந்துவிடும். இதுபற்றி எச்ஐவி கிருமியை பரிசோதித்த பல்வேறு ஆய்வு முடிவுகளும் உறுதி செய்துள்ளன.  

Medical News Today Link 1Medical News Today Link 2

உண்மை இப்படியிருக்க சமூக ஊடகங்களில், பெப்சியில் எச்ஐவி ரத்தம் கலந்துள்ளது, மாஸாவில் எச்ஐவி கலந்துள்ளது என வித விதமான வதந்திகளை பல ஆண்டுகளாக பரப்பி வருகின்றனர். அதன் சமீபத்திய வடிவம்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல். இதனை யாரும் உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False