கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், எச்.ராஜா பெயரில் வெளியான ட்வீட் ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’சீனாவுடன் போர் நடந்து, நான் பலியானால், எனக்கு கூவம் ஆற்றங்கரையில் எனக்கு சிலை வைப்பீர்களா?,’’ என்று எச்.ராஜா கேட்டதாகவும், அதற்கு மற்றொருவர் ‘’நீ எங்க பலி ஆவ? சைனீஸ் கத்துக்கிட்டு சைனாக்காரன் புகழ் பாடிட்டு இருப்ப,’’ என பதில் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் இருப்பது எச்.ராஜாவின் உண்மையான ஐடியா என்றால் இல்லை; யாரோ எச்.ராஜா பெயரில் போலியான ஐடி தொடங்கி, இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.

எச்.ராஜாவின் உண்மையான ட்விட்டர் ஐடி எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. 

இதேபோல, நாம் சந்தேகிக்கும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஐடி போலியானது என்பதற்கான ஆதாரத்தை கீழே பார்க்கலாம்.

இதன்பேரில், @HRajaOffl என்ற ட்விட்டர் ஐடியின் விவரம் தேடினோம். அப்போது, இது வேண்டுமென்றே எச்.ராஜாவை கேலி செய்வதற்காகவே தொடங்கப்பட்ட போலியான ஐடி என்ற விவரம் கிடைத்தது. 

அந்த போலி ஐடியில் வெளியான குறிப்பிட்ட ட்விட்டர் பதிவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

H Raja fake twitter post link Archived Link 

இந்த ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, அதில், எச்.ராஜாவின் முகத்தை மட்டும் அசலைப் போல ஃபோட்டோஷாப் செய்து, தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False