
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறி அழும் மகள், என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 |
Article Link | Archived Link 2 |
செல்போனில் பெண் ஒருவர் வீடியோ காலில் பேசும் புகைப்படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறியழுதபடி மகள்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
dailyupdateus.com என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியை வாட்ஸ்அப் மேட்டர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 30 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட தந்தை என்று குறிப்பிட்டுள்ளனர். கொரோனா நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மீண்டும் வருவோமா என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், அரசின் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு செல்ல மக்கள் அச்சப்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது எங்கே நடந்தது, தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் இணையதளத்தில் வெளியான செய்தியைப் பார்த்தோம். அதில், கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள எட்டு மத்திய சிறைகளும் கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளை அவர்கள் குடும்பத்தினர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், குடும்பத்தினருடன் பேச மாற்று ஏற்பாடுகளை சிறைத்துறை செய்து கொடுத்துள்ளது. இதற்காக 58 ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளது. அப்படி ஒரு கைதி தன்னுடைய மகளுடன் பேசுகிறார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
செய்தி சரியாக உள்ளது… ஆனால், மக்களை ஈர்க்கும் வகையில் தலைப்பில் தவறு இருப்பது புரிந்தது.
சிறைச்சாலையில் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேச வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது தொடர்பாக வெளியான மற்ற செய்திகள் சில…
puthiyathalaimurai.com | Archived Link 1 |
tamil.samayam.com | Archived Link 2 |
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவருமே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்தான். ஆனால், தந்தைக்கு கொரோனா பாதிப்பு வந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றத்தை தரும் வகையில் தலைப்பு வைத்துள்ளனர். சிறையில் உள்ள கைதிகளை அவர்கள் குடும்பத்தினர் சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொது மக்கள் யாராக இருந்தாலும் அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வர ஊரடங்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்படவில்லை. இதன் அடிப்படையில் தலைப்பு தவறாக உள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள்?- அதிர்ச்சி தரும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False Headline
