“சூர்யாவை கிறிஸ்தவர் என்று விமர்சித்த எச்.ராஜா!” – வைரல் ஃபோட்டோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

நடிகர் சூர்யாவை கிறிஸ்தவர் என்றும் அவர் இந்து விரோதி என்றும் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H RAJA 2.png

Facebook Link I Archived Link

சன் நியூஸ் தொலைக்காட்சியின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிர்பட்டுள்ளன. முதல் நியூஸ் கார்டில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியது உள்ளது. அதில், “30 கோடி மாணவர்கள் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக் கொள்கை. புதிய கல்வி கொள்கை பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று இருந்தது.

அடுத்த நியூஸ் கார்டில், எச்.ராஜா படத்தை வைத்து அவர் சூர்யா பற்றி கருத்து தெரிவித்தது போன்று இருந்தது. அதில், “சாமூவேல் சூர்யா ஹிந்து விரோதி… நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சாமூவேல் சூர்யா. அவர் ஒரு இந்து விரோதி, கிறிஸ்தவ கைக்கூலி – எச்.ராஜா” என்று இருந்தது.

இந்த பதிவை, நாம் தமிழர் ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் தமிழர் கதிர் திண்டுக்கல் என்பவர் 2019 ஜூலை 15ம் தேதி பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:

நடிகர் சூர்யா, தன்னுடைய அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த அகரம் ஃபவுண்டேஷன் விழாவில் நீட், மும்மொழி கொள்கை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சூர்யாவுக்கு எதிராக அ.தி.மு.க, பா.ஜ.க கட்சியினர் கொந்தளித்தனர்.

இந்த நிலையில், அறக்கட்டளை விழாவில் சூர்யா பேசியது தொடர்பாகவும், நடிகர் சூர்யாவை கிறிஸ்தவ கைக்கூலி என்று எச்.ராஜா விமர்சித்தது போன்றும் சன் நியூஸ் டிவி நியூஸ் கார்டுகளை வெளியிட்டது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி நடிகர் விஜய் தவறாக பேசிவிட்டார் என்று அவரை ஜோசப் விஜய் என்று விமர்சனம் செய்தவர் எச்.ராஜா. அதனால் தற்போது சூர்யாவைப் பற்றியும் அப்படி ஏதாவது பேசியுள்ளாரா என்று தேடினோம்.

அப்போது, நடிகர் சூர்யா மக்களிடையே வன்முறையைத் தூண்டுகிறார் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்த செய்தி கிடைத்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல், “சூர்யாவின் இயற்பெயர் சாமூவேல் சூர்யா, அவர் கிறிஸ்தவ கைக்கூலி” என்று எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளாரா என்று தேடினோம். அவருடைய பேட்டியில் அவ்வாறு எதுவும் இல்லை. 

ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோல கருத்து தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் அப்படி இல்லை. 2019 ஜூலை 12ம் தேதி முதல் 16ம் தேதி வரையில் அவர் வெளியிட்ட ட்வீட் படம் கீழே…

H RAJA 3.png

எச்.ராஜா கூறியதாக வெளியான நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை ஆய்வு மேற்கொண்டோம். சன் நியூஸ் வெளியிட்டதாக கூறப்படும் அந்த நியூஸ் கார்டுகளை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அதில், நடிகர் சூர்யா தொடர்புடைய நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. ஆனால், எச்.ராஜா தொடர்புடைய நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை.

Archived Link

இந்த இரண்டு நியூஸ் கார்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், எச்.ராஜா நியூஸ் கார்டில் சன் நியூஸ் லோகோ தெளிவில்லாமல் இருந்தது. பின்னணி டிசைனும் இல்லாமல் இருந்தது. இரண்டு நியூஸ் கார்டிலும் வெவ்வேறு ஃபாண்ட் பயன்படுத்தப்பட்டு இருந்தது. எச்.ராஜா படம் சன் நியூஸ் கார்டு டிசைனோடு ஒத்துப்போகவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்று உறுதியானது.

H RAJA 4.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நடிகர் சூர்யா ஒரு கிறிஸ்தவ கைக்கூலி என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“சூர்யாவை கிறிஸ்தவர் என்று விமர்சித்த எச்.ராஜா!” – வைரல் ஃபோட்டோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •