சிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கப்பட்ட விவகாரத்தில் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H Raja 2.png
Facebook Link Archived Link

எச்.ராஜா படத்துடன் கூடிய பிபிசி தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பெண் பக்தரை தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் அர்ச்சனை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் களைப்பாக கூட இருந்திருக்கலாம் – எச்.ராஜா பா.ஜ.க தேசிய செயலாளர்” என்று உள்ளது.

இந்த பதிவை, facebook DMK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் MeenaCatherine என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். 

உண்மை அறிவோம்:

நியூஸ் கார்டு அசலானது போல இல்லை. தமிழ் ஃபாண்ட், டிசைன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. தேசிய செயலாளர் என்று குறிப்பிடுவதற்கு பதில் தேசிய செயளாலர் என்று பிழையாக இருந்தது. பி.பி.சி தமிழில் இவ்வளவு அப்பட்டமான பிழையோடு நியூஸ் கார்டு வெளியாக வாய்ப்பில்லை.

H Raja 3.png

இருப்பினும் பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கம் சென்று நவம்பர் 17, 18ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், எச்.ராஜா தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. 

சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து பக்தை தாக்கப்பட்டது குறித்து எச்.ராஜா அறிக்கை, பதிவு வெளியிட்டுள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பவம் தொடர்பாக எச்.ராஜா எந்த ஒரு அறிக்கையையும் பதிவையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், பிபிசி தமிழ் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலி என்று பிபிசி வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது.

H Raja 4.png
BBC Tamil Archived Link

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்தபோது, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டது கிடைத்தது. அதற்கு பதில் அளித்துள்ள பலரும் சிதம்பரம் விவகாரம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தனர். ஆனால், எச்.ராஜா எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

Archived Link

இது குறித்து தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். “இது தவறான தகவல். அவர் அவ்வாறு கூறவில்லை” என்று கூறி முடித்துக்கொண்டனர்.

நம்முடைய ஆய்வில்,

பிபிசி தமிழ் வெளியிட்டதாக கூறப்படும் நியூஸ்கார்டு பிழையோடு உள்ளது.

சிதம்பரம் விவகாரம் தொடர்பாக எச்.ராஜா கூறியதாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் பிபிசி தமிழ் வெளியிடவில்லை.

சமூக ஊடகங்களில் பரவும் இந்த நியூஸ்கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக எச்.ராஜா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “பெண் பக்தரைத் தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் களைப்பாக கூட இருந்திருக்கலாம்” என்று எச்.ராஜா கூறியதாக பகிரப்படும் பிபிசி லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். яндекс

 

 

 

Avatar

Title:சிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False