விஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழகம்

‘’எனது மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடத் தயார்,’’ என்று விஜய் சேதுபதி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நடிகர் விஜய் சேதுபதி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுடன் நடிகர் மணிவண்ணன் புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “என் மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடவும் தயார்! – இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்கு நடிகர் விஜய்சேதுபதி ஆவேசம்” என்று குறிப்பிட்டுள்ளனர். மணிவண்ணன் பகுதியில், “அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, ‎Karthik Murugan‎ என்பவர் RSS TAMILNADU என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மே 12ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி இந்து மதக் கடவுள்களை விமர்சித்து பேசியதாக பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரேஸி மோகன் பேசியதை மேற்கோள்காட்டி விஜய் சேதுபதி பேசினார். அவராக எதையும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சித்து எப்படி பதிவு வெளியிடலாம் என்று விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

tamilexpressnews.comArchived Link

விஜய் சேதுபதி பேசியது சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை. அவர் பேசியது தவறாகவே இருந்தாலும் விஜய் சேதுபதியின் மனைவியை விமர்சித்து பதிவிடுவது எந்த வகையில் நியாயமானது என்று தெரியவில்லை. நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பயன்படுத்தி இந்த பதிவு வெளியிட்டிருப்பதால் இது பற்றி ஆய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

நியூஸ் கார்டு டிசைன் பழையதாக உள்ளது. தமிழ் ஃபாண்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிடும் ஃபாண்ட் போல் இல்லை. ஆனால், மே 12, 2020 அன்று இந்த நியூஸ் கார்டு வெளியானதாக தேதி குறிப்பிட்டிருந்தனர். எனவே, மே 12ம் தேதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. மேலும், தற்போது அவர்கள் பயன்படுத்தும் நியூஸ் கார்டு டிசைனுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவானது. p100

இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஆன்லைன், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை குறித்து கேட்டோம். அதற்கு அவர், “இது போலியான நியூஸ் கார்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த டிசைன் நியூஸ் கார்டை நாங்கள் பயன்படுத்தினோம். அதிக அளவில் போலிகள் உலாவுவதால் அவ்வப்போது நியூஸ் கார்டை மாற்றி வருகிறோம். இந்த டிசைன் நியூஸ் கார்டுக்குப் பிறகு ஏராளமான டிசைனை நாங்கள் மாற்றிவிட்டோம். எங்கள் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தால் நாங்கள் தற்போது பயன்படுத்தும் நியூஸ் கார்டு டிசைன் தெரியும்” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி தொடர்ந்து அவதூறான, அசிங்கமான கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருவதாக அவரது ரசிகர்கள் போலீசில் புகார் செய்திருக்கும் செய்தி, புகார் கடிதம் நமக்கு கிடைத்துள்ளது.

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு என்று பகிரப்படுவது போலியானது என்று சம்பந்தப்பட்ட செய்தி ஊடகம் நம்மிடம் விளக்கம் அளித்துள்ளது. 

இதன் அடிப்படையில், விஜய் சேதுபதி தன் மனைவி பற்றி பேட்டி அளித்ததாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:விஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False