உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன?

Coronavirus உலகச் செய்திகள் மருத்துவம் I Medical

உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

இதனை வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதைக் காண முடிந்தது. 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ருவாண்டாவின் ஜனாதிபதி திரு பால் ககாமே WHOக்கு எதிராக போராட நடவடிக்கை எடுத்துள்ளார். இனி வெளிநாடுகளில் இருந்து யாரும் ஆப்ரிக்க நாடுகளை ஆளவோ கட்டுப்படுத்தவோ அனுமதிக்க மாட்டோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்ரிக்க மக்கள் மூலிகை மருத்துவத்தை நம்புகிறோம். இவர்கள் (WHO) போரை விரும்புகிறார்கள். WHO எங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கு ஆதாரமாக, ekyooto.co.uk என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி மற்றும் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவின் லிங்க் ஆகியவற்றையும் மேற்கண்ட பதிவில் இணைத்துள்ளனர். 

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த அந்த ஃபேஸ்புக் பதிவையும் பார்வையிட்டோம். 

Facebook Claim LinkArchived Link

ஆனால், இது தவறான தகவல் என்று கூறி, நம்மைப் போன்ற ஆப்ரிக்காவைச் சேர்ந்த உண்மை சரிபார்ப்பாளர் ஒருவர் ஏற்கனவே ஆய்வு முடிவை வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

இதன்படி, Africa Check நிறுவனத்தினர் இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவை சமர்ப்பித்துள்ளனர். அதில், ‘’ருவாண்டா ஜனாதிபதி ககானே ஒருபோதும் உலக சுகாதார அமைப்பை எச்சரிக்கவில்லை, அப்படி அவர் செய்திருந்தால் பெரும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கும். தவிர, அவர் மடகாஸ்கர் ஜனாதிபதி பரிந்துரைத்த மூலிகை மருந்தை ஆதரிக்கவில்லை,’’ எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, அறிவியல் பூர்வமான மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் பரிந்துரைகளை ஏற்று ருவாண்டா செயல்படும் என்றுதான் ககாமே குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும், அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சித்த வைத்திய மருந்துகளை எதிர்ப்புச் சக்தி மருந்துகளாக கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு தெளிவான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

WHO statement on Traditional Medicine use in Covid 19 treatment  

பால் ககாமேவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்படி எந்த மிரட்டல் செய்தியும் காணவில்லை. 

http://paulkagame.com/

இதேபோல, அவர் கடைசியாக செய்தியாளர்களுக்கு அளித்த விரிவான பேட்டியில் கூட உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்து எந்த கருத்தும் கூறவில்லை. இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். சில நம்பகத்தன்மை இல்லாத செய்தி ஊடகங்கள் அவரை பற்றி வெளியிட்ட தவறான செய்திகளே இந்த குழப்பத்திற்கு காரணமாகும். முன்னணி ஊடகங்களில் இப்படியான செய்தி எங்கேயும் வெளியாவில்லை.  

Africacheck.org Link  Archived Link 

எனவே, ருவாண்டா ஜனாதிபதி பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி பல்வேறு மொழிகளிலும் தொடர்ச்சியாக வதந்தி பரப்பப்பட்டு வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False