சோமாலியாவை விட பின் தங்கிய இந்தியா: அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு!

சமூக ஊடகம் | Social Media சமூகம் | Society

உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாக்கு 118வது இடம் கிடைத்துள்ளதாகவும்… ஆனால் சோமாலியா 76வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

INDIA 2.png

Facebook Link I Archived Link

இரண்டு புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோமாலியாவை விட பின்தங்கிவிட்ட இந்தியா! உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல் – ஐ.நா சபை அறிவிப்பு. சோமாலியா 76வது இடம். இந்தியா – 118வது இடம்” என்று ஃபோட்டோஷாப் மூலம் எழுதப்பட்டுள்ளது. 

இந்த பதிவை, Maruppu – மறுப்பு என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஏதும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடுகிறதா, 2019ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளதா, அதில் இந்தியாவுக்கு 118வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அப்போது ஐக்கிய நாடுகள் சஸ்டெயினபிள் டெவலப்மெண்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு இப்படி ஒரு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருவது தெரிந்தது.

2019ம் ஆண்டுக்கான அறிக்கையை இந்த அமைப்பு கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவுக்கு 140வது இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விகடன் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். 2019ம் ஆண்டு சோமாலியாவுக்கு 112வது இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பான பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2019ம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு 140வது இடம், சரி 2018ம் ஆண்டிலாவது இந்தியாவுக்கு 118வது இடம் கிடைத்ததா என்று தேடினோம். ஆனால், 133வது இடம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். 2018ம் ஆண்டு சோமாலியாவுக்கு 98வது இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பான முழு பட்டியலையும் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2017ம் ஆண்டு இந்தியாவுக்கு 122வது இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2016ம் ஆண்டு இந்தியாவுக்கு எந்த இடம் கிடைத்தது என்று கூகுளில் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு இந்தியாவுக்கு 118வது இடம் கிடைத்தது தெரிந்தது.  அந்த ஆண்டு சோமாலியாவுக்கு 76வது இடம் கிடைத்ததும் தெரிந்தது. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். 2016ம் ஆண்டு பட்டியலை 2019ம் ஆண்டு வெளியிட்டிருப்பது அதாவது பழைய செய்தியை எடுத்து புதிதுபோல வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

2019ம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கிடைத்துள்ளது.

2017ம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கிடைத்துள்ளது.

2017ம் ஆண்டு இந்தியாவுக்கு 122வது இடம் கிடைத்தது என்ற பிபிசி தமிழ் செய்தி கிடைத்துள்ளது.

2016ம் ஆண்டு இந்தியாவுக்கு 118வது இடமும் சோமாலியாவுக்கு 76வது இடமும் கிடைத்தது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சோமாலியாவை விட பின்தங்கிய இந்தியா என்ற தகவல் உண்மையானது என்றும் ஆனால், 2016ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 118வது இடம் கிடைத்தை புதிதுபோல வெளியிட்டுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்படுகிறது. 2019ம் ஆண்டு உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 140வது இடம் வழங்கப்பட்டுள்ளது. dating seiten liste

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான தகவலும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சோமாலியாவை விட பின் தங்கிய இந்தியா: அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: Mixture