இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் சினிமா

‘’இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Tamil Traditional Foods என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், cine café என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை கிளிக் செய்து படித்து பார்த்தோம்.

அதில் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! என தலைப்பிட்டு நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே, தனது ஆசிரியர் மகளை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறியுள்ளனர். ஆனால், புகைப்படத்தை பார்க்கும்போது அவர்தான் இமான் அண்ணாச்சியின் மனைவி என்பது போல உள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதனை நமது ஆதாரத்திற்காக, ஆர்கிவ் (Archive Link) செய்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேட முயற்சித்தபோது, இதே செய்தியை மேலும் சிலர் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

Facebook Link I Archived Link

இதேபோல மேலும் ஒரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Facebook Link I Archived Link

ஆனால், இவர்கள் செய்தியின் தலைப்புக்கும், அதன் புகைப்படத்திற்கும் தொடர்பே இல்லை. இதைப் பார்த்தால் வாசகர்கள் குழப்பமடையும் வகையில் உள்ளது. அதாவது மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்தான் இமான் அண்ணாச்சியின் மனைவி என்பது போல இது உள்ளது.

இதையடுத்து குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற சந்தேகத்தில் நீண்ட நேரம் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதில் இமான் அண்ணாச்சியுடன் இருப்பவர் ஐஸ்வர்யா பிரபாகர் என தெரியவந்தது. 

இந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது பிளாக்ஸ்பாட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக உள்ள ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, பரபரப்பிற்காக, இத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளனர் என தெரியவருகிறது.

எனவே, செய்தியின் தலைப்பிற்கும், புகைப்படத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளதால், இது வாசகர்களை தவறாக வழிநடத்துவதாக உள்ளது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தியின் தலைப்பு மற்றும் புகைப்படம் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் பரபரப்பிற்காக பகிரப்படும் இத்தகைய குழப்பமான செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •