கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

சமூக ஊடகம்

‘’கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பக்கோடா பாய்ஸ் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கீழடி ஆய்வின் 4ம் கட்ட ஆய்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், மத ரீதியான அடையாள சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகத்தின் எச்சம் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன், தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத, படிக்க அறிந்திருந்தார்கள் எனவும் தெளிவாக நிரூபணமாகியுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இதன்பேரில், அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள Jesus Network Tv என்ற ஃபேஸ்புக் பக்கத்தினை பார்வையிட்டோம்.

அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் தலைப்பிலேயே, இந்த போலி செய்தி பற்றி அவர்கள் மறுப்பு தெரிவித்து, பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண நேரிட்டது.

அதில், தங்களை பற்றி யாரோ ஒரு சகோதரர் இத்தகைய போலியான வதந்தியை பரப்பியுள்ளதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook LinkArchived Link 

இதையடுத்து குறிப்பிட்ட பதிவை Fotoforensics இணையதளத்தில் பக்கோடோ பாய்ஸ் புகைப்படத்தை பதிவேற்றி சரிபார்த்தோம். அப்போது இது மார்ஃபிங் செய்யப்பட்டது, என தெளிவாகியது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போலியானது என சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் ஐடியே மறுப்பு தெரிவித்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான ஃபேஸ்புக் செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False