
‘’ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த கேரள நர்ஸ் சௌமியா பெயரில் இஸ்ரேல் புதிய போர் விமானம் அறிமுகம் செய்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மே 16ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த நிலைத் தகவலில், ‘’ பாலஸ்தீன் தீவிராவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவை சார்ந்த செவிலியர் செளமியா பலியானார்..
செளமியாவின் நினைவை போற்றும் வகையில் இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு செளமியா என்று பெயர் சூட்டி பெருமைபடுத்தியுள்ளது
இந்திய செவிலியர் செளமியாவின் தியாகத்தை பெருமைபடுத்திய இஸ்ரேலுக்கு ஒரு பிக் சல்யூட்
கொடுங்க நண்பர்களே..!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை காரணமாக, இரு தரப்பினரும் ஏவுகணைகள், போர் விமானங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர். இதில், இஸ்ரேலில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் சவுமியா என்பவர், ஹமாஸ் அமைப்பினர் நிகழ்த்திய ராக்கெட் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்தும் உள்ளது.
NewIndianExpress Link I HindustanTimes Link
இந்நிலையில், சௌமியா பெயரில் இஸ்ரேல் நாடு புதிய போர் விமானம் ஒன்றை தயாரித்துவிட்டதாகக்கூறி மேற்கண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், இது சீன ராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானமாகும். அதன் புகைப்படத்தை எடுத்து, இவ்வாறு எடிட் செய்துள்ளனர்.

Gushiciku.cn Link I Archived Link
சீன ராணுவம் சமீபத்தில், தனது Mirage ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, Chengdu J10 ரக விமானங்களை வாங்கியுள்ளது. அதில் ஒரு போர் விமானத்தின் புகைப்படம்தான் மேலே நாம் காண்பது. இந்த போர் விமானங்களை சீன ராணுவத்திற்காக, Chengdu Aircraft Corporation என்ற வர்த்தக குழுமம் தயாரித்து, விநியோகித்து வருகிறது.
எனவே, சீனப் போர் விமானத்தை புகைப்படத்தை எடுத்து, சௌமியா என்ற பெயரை அதில் சேர்த்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்?
Fact Check By: Pankaj IyerResult: Altered

SIR, I WAS NOT AWARE. KINDLY REMOVE IT. I had no tool to check.THANKS..