“ஜெயலலிதா காலில் விழுந்த நடிகர் விஜய்?” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்!

அரசியல் சமூக ஊடகம்

நடிகர் விஜய் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Vijay 2.png
Facebook LinkArchived Link

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலில் திரைப்பட நடிகர் விஜய் விழுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளார். 

வேறு ஒருவர் ஷேர் செய்த பதிவை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதன் மீது “விஜய் பிகிலை கீழே போட்டு தேடியபோது” போட்டோஷாப்பில் எழுதி பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை சிரிப்பு மூஞ்சி என்ற ஃபேஸ்புக் பக்கம், 2019 செப்டம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வெளிப்படையாக நடிகர் விஜய் ஆதரவு அளித்தார். அதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியை சந்தித்து பேசினார். இதனால், அவரது ஆதரவு பா.ஜ.க கூட்டணிக்கு என்று பேசப்பட்டது. ஆனால், 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின்போது தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று குறிப்பிடவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும்படி கூறினார்.

Asianet NewsArchived Link 1
VikatanArchived Link 2

மெர்சல், சர்க்கார் என்று அவருடைய படங்களில் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிகில் திரைப்படப் பாடல் வெளியீட்டில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய்க்கு எதிராக அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா காலில் நடிகர் விஜய் விழுவது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

BBC TamilArchived Link 1
Maali MalarArchived Link 2

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு படங்கள் ஏதும் இணையத்தில் உள்ளதா என்று தேடினோம். 

Vijay 2A.png

நடிகர் விஜய் ஜெயலலிதா சந்திப்பு படங்கள் இணையத்தில் நிறைய உள்ளன. ஆனால், வேஷ்டி கட்டிச் சென்று ஜெயலலிதா காலில் விழுந்தது போல செய்தி, புகைப்படம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த புகைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் முகம் மட்டும் மிகவும் அலசலாக இருந்தது. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தோன்றியது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அசல் படம் நமக்கு கிடைத்தது. 2008ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜெயலிதாவின் காலில் விழும் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து முகத்தை மாற்றிப் பதிவிட்டது தெரிந்தது. அவுட்லுக் இதழ் கூட இந்த புகைப்படத்தை 2008ம் ஆண்டு வெளியிட்டிருந்தது தெரியவந்தது

Vijay 2B.png

தொடர்ந்து தேடியபோது, இந்த படத்துடன் இன்னொரு படமும் இருந்தது. அதில், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் அருகில் உள்ளார். இந்த படத்தைப் பார்த்தால் ஜெயலலிதா ஓவர் கோட் அணிந்திருப்பது போல உள்ளது. அதாவது, 1996-க்குப் பிறகு, 2000ம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் போல உள்ளது. பழைய படத்தை எடுத்து எடிட் செய்துள்ளனர்.

Outlook IndiaArchived Link 1
sathyu-sathyu.blogspot.comArchived Link 2
Chronic WriterArchived Link 3

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஜெயலலிதாவின் காலில் ஒருநபர் விழும் பழைய புகைப்படத்தை எடுத்து, விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களை மார்ஃபிங் முறையில் வைத்துப் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.

Vijay 3.png

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“ஜெயலலிதா காலில் விழுந்த நடிகர் விஜய்?” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •