
‘’தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு,’’ என்று கூறி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
#தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு…!#அனைத்து மாநிலங்களிலும் #மொழி #பிரிவினை பேச #ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்..?

மே 4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கெஜ்ரிவால் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைத்து, ‘’தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு, அனைத்து மாநிலங்களிலும் மொழி பிரிவினை பேச ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்.. தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு.. இதற்குத்தானே தமிழ்நாடு அரசியல்வாதிகள் காத்திருந்தார்கள். அதன் விளைவுதான் இது,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, நியூஸ்7 தொலைக்காட்சி எங்கேயும் செய்தி வெளியிட்டுள்ளதா என முதலில் தேடிப் பார்த்தோம். அப்போது நியூஸ்7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான ஒரு செய்தியின் ஆதாரம் கிடைத்தது.

மே 3ம் தேதி நியூஸ் 7 தொலைக்காட்சி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த செய்தியை வைத்துத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர்.
Archived Link
இதில், ‘’ டெல்லி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் சூழலில், தமிழக மாணவர்களை குறி வைத்து கெஜ்ரிவால் பேசியுள்ளதாக தமிழக மாணவர்கள் குற்றச்சாட்டு!,’’ என்று கூறப்பட்டுள்ளது. நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியை மட்டும் பகிர்ந்திருந்தால் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், இதனை பகிர்ந்த நபர், தனது சொந்த கருத்துகளையும் இணைத்து, பதிவிட்டுள்ளார். எனவே, இந்த பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து உள்ளதாகவே அர்த்தம் கொள்ள முடியும். அத்துடன், ஒரு செய்தியை வைத்து, தான் நினைக்கும் கருத்துகளையும் சித்தரித்து வெளியிட்டுள்ளதால், இதில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி சொந்த கருத்து கலந்துள்ளதால் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதற்கும், தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதற்கும் என்ன தொடர்பு?
Fact Check By: Parthiban SResult: Mixture
