‘’இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்,’’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

FB Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவால், கிஷோர் கே ஸ்வாமி, உமா மகேஷ்வரன், ஆதன் தமிழ் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, ராஜவேல் நாகராஜன், முக்தார் என்று பலரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்த சூழலில், மேற்கண்ட விவகாரம் பற்றி செய்தி புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பலரும் குறிப்பிட்ட நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படும் போலியான ஒன்றாகும். இதனை புதிய தலைமுறை வெளியிடவில்லை.


இதுபற்றி நாம் அவர்களது ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False