‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதே தகவலை உண்மை என நம்பி மேலும் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர்.

Facebook Claim Link 1Archived Link 1

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் ஆதாரம் என்று கூறி மற்றொரு பதிவின் லிங்கை இணைத்துள்ளனர். இந்தி மொழியில் வெளியிடப்பட்ட அந்த ஃபேஸ்புக் பதிவின் லிங்கையும் கீழே அளித்துள்ளோம்.

Facebook Claim LinkArchived Link

இதை வைத்துப் பார்த்தால், முதலில் இந்தி மொழியில் பரவ தொடங்கிய இந்த தகவல் பிறகு மொழிபெயர்ப்பு செய்து, தமிழிலும் பரவுவதாக, தெரிகிறது.

இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்ய தொடங்கிய சில மணி நேரத்தில், இதனை பகிர்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக, தங்களது பதிவை எடிட் செய்து, வேறு ஒரு தகவல் சேர்த்திருந்ததையும் கண்டோம்.

Facebook Post LinkArchived Link

அதாவது, ‘’பீகாரில் ஊரடங்கு கொடுமையால் உணவு இன்றி வாடிய இளம்பெண், மாம்பழம் தோட்டத்தில் கீழே விழுந்த மாம்பழத்தை எடுக்கச் சென்றார். அவரை மாம்பழ தோட்ட உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதை வைத்துப் பார்த்தால், வேறொரு சம்பவத்தை முதலில் தவறாகப் புரிந்துகொண்டு வதந்தி பரப்பியவர்கள் பிறகு தங்களது தவறை திருத்திக் கொண்டதாக, தெரிகிறது. ஆனால், இன்னும் சிலர் உண்மை தெரியாமல் தவறான தகவலையே தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என்பதும் புரிகிறது.

உண்மையில், இதில் இறந்துகிடக்கும் இளம்பெண், சமீபத்தில் 1500 கிமீ தொலைவிற்கு, தனது தந்தையை ஏற்றிக் கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்ற ஜோதி பாஸ்வான் இல்லை. இதுதொடர்பான வதந்தி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, பல ஊடகங்களும் இதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருக்கின்றன.

TOI Link TheQuint Link

இதில் இருக்கும் 14 வயது சிறுமி, மாம்பழ தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் அதன் உரிமையாளரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, இரு வேறு சம்பவங்களை ஒன்றாக இணைத்து, தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற சந்தேகமான தகவலை காண நேரிட்டால், எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்?

Fact Check By: Pankaj Iyer

Result: False