நிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சினிமா | Cinema

நடிகைகள் நிவேதா பெத்துராஜ், நமீதா போன்றவர்களின் புகைப்படத்தை இணைத்து ‘’பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்,’’ என்ற தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதுபற்றி வாசகர்கள் பலரும் நம்மிடம் முறையிட்டதால் இதன் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதே நபர் நமீதா புகைப்படத்தை இணைத்து மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தார். அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Facebook Claim Link 1Archived Link 1

உண்மை அறிவோம்:
பீகாரில் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த நபர்களை அவர்களின் பிறப்புறுப்பிலேயே சுட்டுக் கொன்ற பெண் போலீஸ் அதிகாரி என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்படுகிறது. ஆண்டுதோறும் அதில் புகைப்படத்தை மட்டும் மாற்றிவிட்டு, அதே செய்தியை பலர் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபற்றி நாமும் கடந்த ஆண்டில் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவை சமர்ப்பித்திருக்கிறோம்.

இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான், மீண்டும் புதியதுபோல மேற்கண்ட வதந்தியை நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் வெளியிட்டுள்ளனர். அது உண்மையில்லை. இதனை பகிர்ந்த நபர் கேலி, கிண்டலுக்காக பகிர்ந்தாரா அல்லது உண்மை என நம்பி பகிர்ந்தாரா என்பது தெரியவில்லை. அதுவும் ஒரே செய்தியை முதலில் நமீதா புகைப்படத்தை வைத்தும், பிறகு நிவேதா பெத்துராஜ் புகைப்படத்தை வைத்தும் சில நாட்கள் இடைவெளியில் அந்த நபர் பகிர்ந்திருப்பதை பார்த்தால், வேண்டுமென்றே ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் முயற்சியாக தெரிகிறது.

ஆனால், இன்றைய சூழலிலும் நிவேதா பெத்துராஜ், நமீதாவை யாரென்றே தெரியாத நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய சாமானிய ஃபேஸ்புக் வாசகர்கள், இதனை பார்க்கும்போது, உண்மைதான் என்று நினைத்து ஏமாறும் சூழல் உள்ளது. இதுபற்றி வாசகர்கள் சிலர் நம்மிடம் வாட்ஸ்ஆப் மூலமாகவும் கவலை தெரிவித்தனர்.

இதுதவிர, போலீஸ் வேடத்தில் நடித்த மற்ற நடிகைகளின் புகைப்படத்தையும் வேண்டுமென்றே விதவிதமான வதந்திகளை இணைத்துச் சிலர் பகிர்வது வழக்கமாக உள்ளது. முதலில் விளையாட்டாக இருந்தாலும், இந்த புகைப்படங்கள் வைரலான பின், அதனை பார்ப்பவர்களுக்கு உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியாது. 

முடிவு:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதைப் போல, பிறரைக் குழப்பக்கூடிய செய்திகள், புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False