
‘’ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை,’’ எனக் கூறி பகிரப்படும் தகவலை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதனை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

செப்டம்பர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளனர். இதில், ‘’மதுவதந்தி உன்னிடம் ஒரு கேள்வி. நீங்க கணவரை இழந்தவராமே, உங்க வர்ணாசிரமப்படி நீங்கள் விதவையாமே, அது உண்மையாக இருந்தால், நீங்கள் தலைக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பொட்டு வைக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கனுமே. ஏன் கலர் கலராக உடையணிந்து, பூ வைத்து, நடனமாடி வாழ்கிறீர்கள்?,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி அருண், சர்ச்சையான கருத்துகளுக்கு பிரபலமானவர். இவரது ட்விட்டர் ஐடி பக்கம் (@YGMadhuvanthi & @madhuvanthiarun), யூடியுப் பக்கம் (https://www.youtube.com/channel/UCU6p8kQ1HTVMek7kPW0ddOQ) சென்று பார்த்தால், ஏராளமான விமர்சனங்களை காண முடியும்.
இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, பகிரப்பட்டுள்ளது. இதில் பகிரப்பட்டுள்ள தகவல் தவறானதாகும். மேலும், மதுவந்தியின் தனிப்பட்ட வாழ்வு மீது அவதூறு பரப்புவதாக உள்ளது.
உண்மையில், அவர் கணவனைப் பிரிந்து வாழ்பவர். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தும் உள்ளார். அவரை பற்றி கடந்த சில மாதங்களாகவே, காரசாரமான விமர்சனங்கள் கூறப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளித்து, சமீபத்தில் கூட விகடன் ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.

அதே விகடன் பேட்டியில், மதுவந்தியும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். ‘’இது என்னோட பர்சனல் விசயம். இதை எதுக்கு வெளில இருக்கறவங்க பேசுறாங்கன்னு புரில. நானும், கணவரும் மியூச்சுவல் முறையில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளோம்,’’ என மதுவந்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபற்றி கூடுதல் ஆதாரத்திற்காக, மதுவந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது கூட இதே தகவலை மேற்கோள் காட்டி பேசினர். இது தவிர, அவரது கணவர் பெயர் அருண் (நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார்). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, அவர்களது வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே, மதுவந்தி பற்றிய சரியான விவரம் அறிந்துகொள்ளாமல், மதுவந்தி ஒரு விதவை எனக் கூறி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் அரைகுறையான தகவலை பகிர்ந்து, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:FactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்!
Fact Check By: Pankaj IyerResult: False
