‘’பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியது ஜெ.அன்பழகன்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதேபோன்ற தகவலை பலரும் உண்மை என நம்பி, ‘’1981-82ல் பிரபாகரனை கலைஞர் சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்தார்,’’ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் வைரலாக தகவல் பகிர்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

BBC Tamil Link

அவரது மறைவை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் திமுகவினர் மட்டுமின்றி, பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வந்தனர். ஆனால், ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட சிலர், இயக்குனர் அமீர் பெயரை மேற்கோள் காட்டி ஒரு தவறான தகவலை உண்மை என பதிவிட தொடங்கினர். அதுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியாகும்.

அதாவது, அன்பழகன் பற்றி ஊடகத்தில் பேட்டி அளித்த அமீர் அவருக்கு இரங்கல் சொல்கிற சாக்கில், ‘’கடந்த 1982ல் நிகழ்ந்த பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரபாகரனை கலைஞர் கருணாநிதி சொல்லி ஜெ.அன்பழகன்தான் ஜாமீனில் எடுத்தார்,’’ என கொளுத்திப் போட்டார்.

Archived Link

இந்த வீடியோவை ஆவுடையப்பன் என்ற பத்திரிகையாளர் எந்த ஆய்வும் செய்யாமலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் உண்மை போல பகிர்ந்திருந்தார்.

Twitter LinkArchived Link

இதனை மேற்கோள் காட்டி பலரும் வித விதமான கதைகளை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியுப் என அவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

உண்மையில், திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான் இந்த சம்பவத்தில் நேரடியாகக் களத்தில் இருந்த சாட்சி. அவர் இதனை மறுத்து, நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1982 மே 5ம் தேதி குறிப்பிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தபோது, கேஎஸ் ஆர் உடன்தான் பிரபாகரன் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருந்தார். கடை வீதிக்குச் சென்றபோது, அங்கே முகுந்தன் (எ) உமா மகேஸ்வரனுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளனர். இதனால், பாண்டி பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்படவே, போலீசார் அங்கே வந்து பிரபாகரன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். பிறகு, பிரபாகரனை எப்படி போராடி மீட்டேன் என்பது பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீண்ட விளக்கம் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Archived Link

ஆதாரமாக அவர், பிரபாகரன் அப்போது போலீசில் அளித்த வாக்குமூலத்தின் நகலையும் பகிர்ந்துள்ளார். அதனை கீழே ஆதாரத்திற்காக நாமும் இணைத்துள்ளோம்.

மேலும், ஜாமீனில் எடுத்த பின் பிரபாகரனை மதுரையிலும், உமா மகேஸ்வரனை சென்னையிலும் தங்க வைத்ததாக, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனே விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அமீர் சொன்ன கட்டுக்கதை வைரலாக பரவி வருவதால், இதுபற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் ஒன்றான The Rising Sun மறுப்பு தெரிவித்து, விளக்கம் அளித்துள்ளது.

Archived Link

எனவே, பிரபாகரனுக்கும், ஜெ.அன்பழகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகிறது. தி.நகர், பாண்டி பஜார், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகள், ஜெ.அன்பழகனின் செல்வாக்கு மிக்க இடமாக உள்ளன என்பதற்காக, பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஜெ.அன்பழகனுடன் தொடர்புபடுத்தி அமீர் வதந்தி பரப்பியுள்ளார். அதனைப் பலர் உறுதி செய்யாமல் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபாகரன் பற்றிய வரலாற்று புத்தகங்களை படித்திருந்தாலே, பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய உண்மை தெரியவந்திருக்கும். உரிய வரலாற்றை வாசிக்காமல், அமீர், சீமான் போன்றவர்கள் சமீபகாலமாக, நடக்காத ஒன்றை நடந்தது போல பேசுவதும், அதனை உண்மை என நம்பி பலர் டிரெண்டிங் செய்வதும் வேதனையாக உள்ளதென்று, தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியவர் ஜெ.அன்பழகன் இல்லை!

Fact Check By: Pankaj Iyer

Result: False