
‘’ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பிய கத்தார் அரசு, அசிங்கப்பட்ட மோடி,’’ எனும் தலைப்பில் ஷேர் செய்யப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:


இதேபோல, மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளும் பகிரப்படுகின்றன.

இதே செய்தியை நமது வாசகர் ஒருவரும் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
‘’கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஏர் இந்தியா விமானம் செல்ல அனுமதி வழங்கியது கத்தார். ஆனால், மீட்பு நடவடிக்கை என்று கூறி கட்டணம் வசூலிப்பதை பற்றி கேள்விப்பட்டதால் அந்த அனுமதியை கத்தார் அரசு ரத்து செய்துவிட்டது. இதனால், ஏர் இந்தியா விமானம் கத்தாரில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது,’’ என்று மேற்கண்ட செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், உண்மை என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கோழிக்கோட்டில் இருந்து தோஹா சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், அங்குள்ள 181 இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் பணி ஞாயிறன்று கைவிடப்பட்டது. இந்த பணி மீண்டும் செவ்வாய் (மே 12) அன்று நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அப்போதே கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் உரிய விளக்கமும் அளித்துவிட்டது.
Unfortunately IX-374 scheduled for today from Doha to Thiruvananthapuram was cancelled for technical reasons. Being rescheduled for 12 May 2020. Passengers already booked for the flight to reconfirm tomorrow. Those with exit permit issues will not be cleared for boarding.
— India in Qatar (@IndEmbDoha) May 10, 2020
ஆனால், இதுதொடர்பாக, பல மலையாள செய்தி ஊடகங்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டதே, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வதந்தி பரவ முக்கிய காரணம்.

இப்படியான செய்திகள் பரவிய நிலையில், உடனடியாக, இதுபற்றி மீண்டும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்தது.
இதுதவிர இந்திய அரசு கத்தாரில் உள்ள இந்தியர்களை மீட்பதை Repatriation என்றே குறிப்பிடுகிறது; Evacuation எனக் கூறவில்லை. இதுபற்றி விமான சேவையில் அனுபவம் வாய்ந்த சஞ்சீவ் கபூர் கூட விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுபோல, கத்தாரில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமான சேவை ஏற்கனவே கடந்த வாரம் ஒருமுறை தாமதமாகியுள்ளது. இலவசம் என்றில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொண்டே இந்த விமானங்கள் இயக்கப்படுவதாகவும், செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கத்தாரில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் ஏர் இந்தியா விமான சேவையில் இடையூறு ஏற்பட்டதற்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம்.
2) Repatriation, Evacuation இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் இந்த செய்தியை அரசியல் உள்நோக்கத்துடன் டிரெண்டிங் செய்கிறார்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263 ) அனுப்பி வையுங்கள்.

Title:ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு?
Fact Check By: Pankaj IyerResult: Partly False

If there is a technical glitch, flights will not be sent back to home country. They will try to land it at the nearby airport.