
நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் 2020 மார்ச் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் ஒருவர் கிண்டல் பதிவாக இந்த மார்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டிருந்தார். உண்மையில் இது இயக்குநர் பாலச்சந்தருடன் ரஜினிகாந்த், கமல் இருக்கும் பழைய படம் ஆகும். ஆனால் இது தெரியாமல் பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
Archived Link |
கமெண்ட் பகுதியில் பாலச்சந்தர் இருக்கும் அசல் படத்தைப் பகிர்ந்திருந்தனர். ஆனாலும், இந்த பதிவு அகற்றப்படவில்லை. எனவே, இது போலியான படம் என்பதை உறுதி செய்ய பழைய படங்களைத் தேடினோம்.

Search Link | rediff.com | Archived Link |
பல்வேறு இணைய ஊடகங்களில் இயக்குநர் பாலச்சந்தருடன் ரஜினி, கமல் இருக்கும் புகைப்படங்கள் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

galatta.com | Archived Link 1 |
Facebook Link | Archived Link 2 |
மேலும், பாலச்சந்தர் பெயரில் உள்ள ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் 2014ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.
இதன் மூலம் ரஜினி, கமலுடன் மோடி இருக்கும் பழைய படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
