
‘’மூன்று கண்கள் உள்ள குழந்தை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
இந்த வீடியோ உண்மையா, பொய்யா என தகவல் தேடும் முன்பு, ஒருமுறை உற்று கவனித்தபோது, இதில் ஒரு ட்ரிக் இருப்பதைக் காண முடிந்தது. அதாவது, அந்த குழந்தையின் வலது கண் அசைவது போலவே, 3வது கண் அசைவும் ஒத்திருந்தது.

3வது கண் எனில், ஒன்று அது தன்னிச்சையாக இயங்கும். அல்லது இடது, வலது கண்களை ஒத்ததாக இருக்கக்கூடும். ஆனால், இந்த வீடியோவில், வலது கண்ப் போலவே, 3வது கண் இயங்குகிறது. 2வது கண் போல ஒருமுறை கூட இயங்கவில்லை.
இதையடுத்து, வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது போலியான தகவல் என்றும், இதுபற்றி ஏற்கனவே பலர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இது மார்ஃபிங் செய்யப்பட்டதுதான் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. மேலும், இப்படி எங்கேயும் எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. ஒரே ஒருமுறை நைஜீரியாவில் 3வது கண் கொண்டு, ஒரு குழந்தை பிறந்ததாக விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைத்து, உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பகிரப்பட்டு வந்த இந்த தகவல், தற்போது தமிழிலும் டிரெண்டிங் ஆகியுள்ளதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
இதுதொடர்பாக, நமது இலங்கைப் பிரிவினர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:மூன்று கண்கள் உள்ள குழந்தை என்று பகிரப்படும் தவறான வீடியோ!
Fact Check By: Pankaj IyerResult: False
