ரஜினிகாந்த் புகைப்படம்; ஸ்டீபன் சோந்தெய்ம் மரணம்: முன்னுக்குப் பின் முரணான செய்தியால் குழப்பம்…
‘’பிரபல இசையமைப்பாளர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்,’’ என்று குறிப்பிட்டு, ரஜினிகாந்த் புகைப்படத்துடன் பகிரப்படும் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Online14Media.Com Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’சற்று முன் பிரபல இசையமைப்பாளர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்,’’ என்று எழுதியுள்ளனர். அதன் கீழே ரஜினிகாந்த் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
பார்ப்பதற்கு, யாரோ தமிழ் அல்லது இந்திய சினிமா பிரபலம் ஒருவர் இறந்துவிட்டதைப் போலவும், அதற்கு ரஜினிகாந்த் நேரில் சென்றதைப் போலவும் அர்த்தம் தோன்றுகிறது.
இதேபோல, கமல்ஹாசன் புகைப்படமும் கீழே உள்ளது. முகம் மட்டும் மறைக்கப்பட்ட மற்றொரு நபரின் புகைப்படமும் உள்ளது.
இதற்குக் கீழே ஒரு வீடியோவை இணைத்துள்ளனர். அந்த வீடியோவில், ஹாலிவுட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஸ்டீபன் சோந்தெய்ம் சமீபத்தில் உயிரிழந்தார் எனக் கூறுகின்றனர். இதற்கும், இந்த செய்தியில் உள்ள புகைப்படங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
தவிர, ஸ்டீபன் இறந்தது 2021, நவம்பர் மாதத்தில். ஆனால், அந்த செய்தியை ஜனவரி, 2022ல் புதியதுபோல எடுத்து, மொட்டையான தலைப்பு சேர்த்து, இவர்கள் பகிர்ந்து வாசகர்களை குழப்பியுள்ளனர்.
எனவே, முன்னுக்குப் பின் முரணான புகைப்படம், செய்திகளை ஒன்று சேர்த்து, லைக், ஷேர் பெறுவதற்காக இப்படி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:ரஜினிகாந்த் புகைப்படம்; ஸ்டீபன் சோந்தெய்ம் மரணம்: முன்னுக்குப் பின் முரணான செய்தியால் குழப்பம்…
Fact Check By: Pankaj IyerResult: Missing Context