குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா?

சமூக வலைதளம்

‘’குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலை பின்னணியில் பல அரிய தகவல்கள் உள்ளன,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Vikatan EMagazine இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி மாணவர் ஒருவரது புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, குதிரை வீரர்கள் சிலையில், குதிரையில் கால்கள், இருக்கும் நிலையை பொறுத்து, அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இறந்தார் எனச் சொல்ல முடியும், என நீண்ட கதை எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறியுள்ளதுபோல, உண்மையில் இப்படி ஏதேனும் அதிகாரப்பூர்வ தகவல் உள்ளதா, என சந்தேகத்துடன் ஆதாரங்கள் தேடினோம். ஆனால், இது பல ஆண்டுகளாக, பரவிவரும் ஒரு நம்பிக்கையே என தெரியவந்தது.

ஆம், குதிரை சிலை அமைப்பதில் சில டிசைன், ஸ்டைல் நோக்கத்திற்காகவே இவ்வாறு குதிரையின் கால்கள் அனைத்தும் சம நிலையில் அல்லது ஒரு கால் மேலே உயர்த்தியபடி, 3 கால்கள் தரையில் ஊன்றியபடி, அல்லது முன்னங்கால்கள் மேலே உயர்த்தியபடி, மற்ற 2 கால்கள் தரையில் ஊன்றியபடி என நிறுவப்படுகிறது.

இதில், ஒருவர் எப்படி இறந்தார் என்பதை பொறுத்தெல்லாம் கணக்கிட்டு, குதிரை சிலையில் அதனை அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுவது தவறாகும்.

இதுபற்றி ஏற்கனவே பல ஆங்கில இணையதளங்கள், ஊடகங்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, இது கற்பனையான கட்டுக்கதை, இதில் எந்த நிரூபிக்கப்பட்ட மரபும் கிடையாது என நிரூபித்திருக்கிறார்கள்.

Snopes.com LinkEftours.comStackexchange.com

இதன்படி, விர்ஜீனியா ஹிஸ்டாரிக்கல் சொசைட்டி இதுபற்றி தெளிவாக ஏற்கனவே விளக்கம் அளித்திருப்பதை காண முடிகிறது.

பெரும்பாலான குதிரை வீரர் சிலைகள், அமைக்கப்பட்ட விதத்திற்கும், அதில் இருக்கும் நபர் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என, தெளிவாகிறது. சிலவற்றில் ஒற்றுமை இருக்கலாம், அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், குதிரை வீரன் சிலை நிறுவுவதற்கு என பிரத்யேக நடைமுறை எதுவும் இல்லை என்பதே இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விசயமாகும்.

wearethemighty.com Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, குதிரை மீது மன்னர்கள், போர் வீரர்கள் அல்லது விஐபிக்கள் அமர்ந்திருப்பது போன்ற சிலை வைக்கப்படுவதில் எந்த மரபும், விதிமுறையும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்டைலுக்காக வைக்கப்படுவதை சிலர் தங்களது சுய லாபத்திற்காக தவறாக உருவகப்படுத்தி வதந்தி பரப்பி வருகிறார்கள். இதனை நம்ப வேண்டாம் என நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False