ரோபோ வீரர்களை உருவாக்கியதா இஸ்ரேல் ராணுவம்?

உலகச் செய்திகள் சமூக வலைதளம்

‘’இஸ்ரேல் ராணுவம் ரோபோ வீரர்களை உருவாக்கியுள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Video Link

Jokers எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 31, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ரோபோ போன்ற உருவம் ஓடி ஓடி குறி பார்த்துச் சுடுகிறது, அதனை சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மேலே, ‘’ இஸ்ரேல் உருவாக்கிய ரோபோ இராணுவ வீரர்கள்… உலகையே கிடுகிடுக்க வைக்கும் அதன் சாகசங்கள்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த வீடியோவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் முதலில் மேற்கண்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்து எடுத்து, Yandex இணையதளத்தில் பதிவேற்றி விவரம் தேடினோம். அப்போது இதுதொடர்பான பல்வேறு வீடியோ இணைப்புகள் கிடைத்தன. 

இதன்படி கிடைத்த வீடியோ இணைப்புகளை பார்வையிட்டபோது, இதனை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த விவரம் கிடைத்தது. 

Facebook LinkArchived Link 

மேற்கண்ட வீடியோவின் வலது ஓரம் கீழே ஒரு இடத்தில் ‘’Bosstown Dynamics’’ என எழுதப்பட்டிருந்ததை காண நேரிட்டது. 

இந்த கீவேர்டை பயன்படுத்தி மறுபடியும் கூகுளில் விவரம் தேடினோம். அப்போது, இதுகுறித்த சில யூ டியுப் வீடியோ இணைப்புகளும், செய்தி விவரங்களும் கிடைத்தன. 

இதன்படி, Corridor Crew என்ற யூ டியுப் பக்கத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை ஃபேக் செய்வதற்காக CGI எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்து, அதனை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். வரிசையாக இந்த சப்ஜெக்டில் 3 வீடியோக்களை அவர்கள் பகிர்ந்த நிலையில், 3வது வீடியோவில் இடம்பெற்றும் காட்சிகளை எடிட் செய்துதான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து சிலர் வதந்தி பரப்பியுள்ளனர்.

இதுதொடர்பான மற்ற வீடியோ இணைப்புகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

YouTube Video Link 1YouTube Video Link 2

இந்த மூன்று வீடியோக்களையும் பார்த்தாலே தெரியும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் மேற்கண்ட ரோபோவை உருவாக்கியுள்ளனர், அது உண்மையான ரோபோ கிடையாது, இதுபற்றிய விளக்கமான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த வீடியோவை உண்மை போல பகிர்ந்து இதனை இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை சித்தரித்துள்ளனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட வீடியோ செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ரோபோ வீரர்களை உருவாக்கியதா இஸ்ரேல் ராணுவம்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False