கிம் ஜாங் உன் மரணம் என்று பகிரப்படும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம்!

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News

‘’கிம் ஜாங் உன் மரணம்,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை ஃபேஸ்புக்கில் கண்டோம். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதே புகைப்படம் மற்றும் இதுசார்ந்த வீடியோவையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Facebook Claim Link 1Archived Link
Facebook Clam Link 2Archived Link 
Facebook Claim Link 3Archived Link 

உண்மை அறிவோம்:
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணப் படுக்கையில் கிடப்பதாகக் கூறி கடந்த ஏப்ரல் 21ம் தேதி சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பல ஊடகங்களும் இந்த செய்தியை அப்படியே காப்பி அடித்தது போல உலகம் முழுக்க பல்வேறு மொழிகளிலும் செய்தி பகிர்ந்தன.

CNN LinkArchived Link

இந்த செய்தி பரவ தொடங்கியதுமே, இது தவறான தகவலாகவே இருக்கும் என்று கூறி ஒருசிலர் கருத்து பகிர்ந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட கிம் நலமுடன் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

எனினும், ஊடகங்கள் மட்டுமின்றி சமூக ஊடக பயனாளர்களும் விதவிதமான ஊகங்களை கிம் ஜாங் பற்றி முன்வைத்தனர். இதில் சிலர் உச்சக்கட்டமாக, கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்தபோது எடுத்த வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து, இதுதான் கிம்மின் அஞ்சலி நிகழ்வு என்று தகவல் பகிர்ந்தனர். அவற்றில் சில ஃபேஸ்புக் பதிவுகளையே நாம் மேலே பார்த்தோம். 

இவர்கள் பகிர்ந்த புகைப்படம், வீடியோ தவறான ஒன்றாகும். அதனை ஒரு சந்தேகத்திற்காக ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அதன் முழு விவரம் கிடைத்தது.

இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம். 

ஆனால், இந்த பழைய வீடியோ தற்போது எப்படி டிரெண்டிங் ஆனது என விவரம் தேடினோம். இதன்படி, Kim Yo Jong என்ற ஃபேஸ்புக் ஐடி ஏப்ரல் 26, 2020 அன்று மேற்கண்ட பழைய வீடியோவை லைவ் முறையில் பகிர்ந்துள்ளது. இதனையே ஃபேஸ்புக் பயனாளர்கள் பல்வேறு மொழிகளில் ஷேர் செய்து வருகின்றனர்.

Kim Yo Jon FB Link Archived Link 

இந்த வீடியோ பதிவிலேயே தெளிவாக Kim Jong il இறுதிச்சடங்கு என்று கூறியுள்ளனர். அவர், தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை ஆவார். கடந்த 2011ம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகே, கிம் ஜாங் உன் இளம் வயதிலேயே வடகொரிய அதிபர் பதவிக்கு வந்தார். 

The Guardian LinkArchived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கிம் ஜாங் உன் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு வீடியோவை எடுத்து, சமீபத்தில் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர, அதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிம் ஜாங் உன் மரணம் என்று பகிரப்படும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False