‘’ பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் பகிரப்படுகிறது.

FB Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி தொடர்பாக, நாம் பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்ட சில பதிவுகளையும் காண நேரிட்டது. அவற்றில், இது போலியான செய்தி என்று கூறியிருந்தனர்.

மற்றொரு பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.

பாஜக ஐடி பிரிவை கேட்டபோது, ‘’சமீபத்தில் சிடிஆர் நிர்மல்குமார் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகியதால், இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இவற்றை உறுதி செய்யாமல், மாலைமுரசு டிவி போன்ற சில ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டும் வருகின்றன. ஆனால், இவை எதுவும் உண்மையல்ல,’’ என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது, அதில் அவர், ‘’திமுக ஆதரவாளர்கள் தயாரித்த போலியான செய்தி இது,’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இவ்வாறு போலியான செய்தி தயாரித்து பரப்பிய நபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வதந்தியை பரப்பிய நபரையும் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.

எனவே, வதந்தியை சரிபார்க்காமல், மாலைமுரசு டிவி அவசர கதியில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False