கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா?

சமூக வலைதளம்

‘’கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா புகைப்படங்கள்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

Renganayagalu

என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 27, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், சில புகைப்படங்களை பகிர்ந்து, ‘’ குஜராத் : கிருஷ்ணா பகவான் அரசாண்ட துவாரகா. இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது. கடல் கொண்ட, அந்த இடத்தில் கடலுக்கு உள்ளே உள்ள அரண்மனை. எவ்வளவு கம்பீரம். அதுவும் அந்த சிங்கம். எவ்வளவு அற்புதம். ஜெய் ஸ்ரீ ராம்,’’ என எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகை பகுதி கடலுக்குள் மூழ்கியதாகக் கதைகள் சொல்லப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக இத்தகைய கதை சொல்லப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ளதுபோல, உண்மையிலேயே இவை துவாரகா நகரின் புகைப்படங்களா என கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். முதலாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது குஜராத் மாநிலத்தில் கடலோரம் அமைந்துள்ள துவாரகஷிஷ் (Dwarakashish) கோயில் என தெரியவந்தது. இந்த கோயில், 2500 ஆண்டுகளுக்கு, ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாப் கட்டியது என நம்பப்படுகிறது. இது கடலில் ஒன்றும் முழுகவில்லை; கடலோரமாக உள்ளது. இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, 2வது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்தோம். அப்போது, இது குஜராத் புகைப்படம் இல்லை, தமிழ் நாட்டின் தரங்கம்பாடியில் இருந்து எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, மற்ற புகைப்படங்களும் குஜராத்தைச் சேர்ந்தவை இல்லை. அமெரிக்காவின் மியாமி நகரில் கடலோரமாக நீருக்கடியில் அமைந்துள்ள The Neptune Memorial Reef பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

இதுபற்றிய மேலும் ஒரு வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேற்கண்ட புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி ஏற்கனவே, பல்வேறு ஆங்கில ஊடகங்கள் ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளன.

TOI LinkHoaxorfact.com Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •