இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் எரித்தனரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் தீயிட்டு எரித்தனர்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Saravana Vel என்பவர் ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் ஆண்கள், சிறுவர்கள் பலர் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் தேசியக் கொடி போல உள்ள ஒரு கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள். பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகக் கண்டன முழக்கமிடுகிறார்கள். இது எங்கே எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், ‘’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை எரித்து இந்தியாவிற்கு ஆதரவாக முஸ்லீம்கள் போராட்டம்,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த குறிப்பிட்ட வீடியோ உண்மையில் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழ்ந்ததா என்ற சந்தேகத்தில் கூகுளில் இதனை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது கடந்த 2016ம் ஆண்டில் இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ என்ற விவரம் கிடைத்தது.

இதன்படி, viveos.net என்ற இணையதளத்தில், கடந்த 2016ம் ஆண்டில் இந்த வீடியோ, Pakistan Flag/Muslims burn paki என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். இதே வீடியோவின் உண்மையான யூ டியுப் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இதனை அனுராக் குமார் என்ற யூ டியுப் பயனாளர் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஆனால், இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. அதில் கமெண்ட் பகிர்ந்த சிலர், பலுசிஸ்தான் விவகாரம் தொடர்பான வீடியோ இது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில், பலுசிஸ்தானில், 2016ம் ஆண்டில் இப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா என தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது இது, 2016ம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கராச்சி பகுதி நிருபரான நிசார் மெஹ்தி என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டார் என்ற விவரம் கிடைத்தது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

https://twitter.com/nisarmehdi/status/781243757589065728

இதை வைத்துப் பார்த்தால், 2016ம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, தெரியவருகிறது. இருந்தாலும் இந்த தகவல் பற்றி வேறு ஏதேனும் செய்தி ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், குறிப்பிட்ட வீடியோ 2016ம் ஆண்டு முதலே இணையத்தில் பரவி வருகிறது. இதனை தற்போதைய காஷ்மீர் பிரச்னையுடன் தொடர்புபடுத்தி தகவல் பகிர்வது தவறான விசயம் என தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் எரித்தனரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False