அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?
‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து, தனித்துப் போட்டியிடுவதாக, பாஜக அறிவித்தது.
இதனை பின்னணியாக வைத்து, மேற்கண்ட 2 நியூஸ் கார்டுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. ஆனால், இவை உண்மையானவை அல்ல என்று, தந்தி டிவி தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தந்தி டிவி லோகோ வைத்து பகிரப்படும் போலியான செய்தி என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…