அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

அரசியல் சமூக வலைதளம்

‘’அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

புதிய தேடல்

என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அயோத்தி விவகாரத்தில் நவம்பர் 15ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையொட்டி, சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகிறது. ஏற்கனவே, அயோத்தி சுற்றுப்பகுதியில் 144 விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 10ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். 

EconomicTimes Link News Link

இதுதவிர, அயோத்தி விவகாரத்தில் போலீஸ் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பாக சில சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

NDTV News Link

இதுதவிர அயோத்தி தீர்ப்புக்கு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கூடுதலாக, உத்தரப் பிரதேச மாநிலத்திலும்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகப் பயனாளர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.   

Archived Link

இதேபோல, அயோத்தி பகுதி போலீசாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி விளக்கமும் அளித்துள்ளனர். 

Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,

1) அயோத்தி விவகாரத்தில் இப்படி எந்த புதிய விதிமுறைகளும் வெளியிடப்படவில்லை.

2) போலீஸ் தரப்பிலும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

3) பொதுவாக, ஒவ்வொரு முக்கிய அரசியல் விவகாரத்தின்போதும் இத்தகைய போலீஸ் சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பகிரப்படுவது வழக்கமாக உள்ளது.

4) போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இத்தகைய வதந்திகளை சமூக ஊடகங்களில் பகிர்வது தவறாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •