கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர் என்று பரவும் வீடியோ உண்மையா?  

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சர்ச் சென்ற திமுகவினர்  கிறிஸ்தவ பாதிரியாரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது, அந்த பாதிரியார் வாக்கு செலுத்த முடியாதுனு மறுத்த காரணத்தால் அவரை தாக்கிய திமுகவினர் …😡🤦‍♂️  #NoVoteToDMK “, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது போன்று, கன்னியாகுமரியில் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா, என்று தகவல் தேடினோம். ஆனால், அவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து, நாம் தேடியபோது கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஒரு ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கிடைத்தது. 

இதில், ‘’A BJP representative hitting a Christian Priest in Bangalore while the service is on.. ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதுவும் உண்மையல்ல

இது, தெலுங்கானா மாநிலம், Bhadradri Kothagudem என்ற இடத்தில் உள்ள CSI-கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமாகும். இதுதொடர்பாக, TV9 Telugu ஊடகம் கடந்த மே, 27, 2018 அன்று வெளியிட்ட ட்வீட் இதோ…

இதன்படி, 2018ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்து, பெங்களூருவில் பாஜக அராஜகம் என்று கூறி ஏற்கனவே வதந்தி பரப்பியுள்ளனர். தற்போது மக்களவைத் தேர்தல் 2024 நடைபெறும் சூழலில், இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து, திமுக.,வினர் பாதிரியாரை தாக்கியதாகக் குறிப்பிட்டு, சிலர் வேண்டுமென்றே பரப்புவதாக, தெளிவாகிறது. 

மேலும், தமிழ்நாடு காவல்துறை தரப்பில் இருந்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ‘இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை; தெலங்கானாவில் நடந்தது,’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில், நம்பகத்தன்மை இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False