
‘’பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய பேராசிரியர் வர்மா,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Siva Shankar என்பவர் இந்த பதிவை, பகிர்ந்துள்ளார். உண்மையில், இதனை Work For Unity என்ற ஃபேஸ்புக் குழு வெளியிட்டுள்ளது. இதில், பேராசிரியர் வர்மா என்பவர் concepts of physics என்ற புத்தகத்தை எழுதியதாகவும், அதற்காக, தனக்கு கிடைத்த ராயல்டி தொகையில் ரூ.1 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டதாகவும், கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பேராசிரியர் ஹெச்.சி.வர்மா இந்திய இயற்பியல் துறையில் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகள், காணொளிகள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இவர் Concepts of Physics என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகம், சிறந்த முறையில் விற்பனை ஆகி வருகிறது. இந்த புத்தகத்திற்காக, ஆண்டுதோறும் அவருக்கு ராயல்டியாக கணிசமான தொகை வருவது உண்மைதான். ஆனால், அவர் ரூ.1 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் என்பதில் உண்மையில்லை.
இத்தகைய வதந்திகள் ஃபேஸ்புக்கில் பரவியதை தொடர்ந்து, அவரே இதனை மறுத்து ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

எனவே உரிய ஆதாரங்களின்படி, பேராசிரியர் வர்மா எதுவும் நன்கொடை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கவில்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய பேராசிரியர் வர்மா: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
