FactCheck: பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ இதுவா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி,’’ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

‘’இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு உள்ளான ஹெலிகாப்டர் விபத்து,’’ என்று கூறி மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சக அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே பனிமூட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத் உள்பட 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பல்வேறு அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

BBC Tamil Link

அதேசமயம், பிபின் ராவத் இறுதி நிமிடங்கள், ஹெலிகாப்டர் விபத்து காட்சிகள் என்று கூறி சமூக வலைதளங்களில் வெவ்வேறு வீடியோக்கள், பலராலும் பரப்பப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நாம் மேலே கண்ட வீடியோ காட்சியும். உண்மையில், அதற்கும் பிபின் ராவத் மரணமடைந்த விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த வீடியோ உண்மையில், கடந்த நவம்பர், 2021 மாதம் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான Mi 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டதாகும். இதுபற்றி ஏஎன்ஐ வெளியிட்ட ட்வீட் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, வேறு ஒரு நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோவை எடுத்து, பிபின் ராவத் மரணத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False