சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர்,’’ என்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், ராகுல் காந்தி பகிர்ந்த ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரை ஒரு நல்ல திறமையான கிரிக்கெட் வீரர் எனவும் வர்ணித்துள்ளதாகக் காணப்படுகிறது. அந்த கிரிக்கெட்டர் என்ற வார்த்தையை மட்டும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடித்ததன் மூலமாக, இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், அவர் கடந்த ஜூன் 14, 2020 அன்று, மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, பாலிவுட் பிரபலங்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் சுஷாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.

இதையொட்டியே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ளதைப் போல, ஜூன் 14, 2020 அன்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நல்ல திறமையான நடிகர் என்றே சுஷாந்த் சிங்கை வர்ணித்துள்ளார். கிரிக்கெட் வீரர் என்று எங்கேயும் கூறவில்லை. ராகுல் காந்தி அன்றைய தினம் வெளியிட்ட ட்வீட்டின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Rahul Gandhi twitter post link Archived Link 

இது உண்மையா? ஒருவேளை ராகுல் தவறான ட்வீட் வெளியிட்டுவிட்டு பின்னர் நீக்கியிருக்கலாம் என்று கூட சிலர் வில்லங்கம் பேசுவார்கள். அவர்களுக்கு விளக்கம் தரும் வகையில் கீழே, ராகுல் வெளியிட்ட உண்மையான ட்வீட்தான் இது என்பதற்கான ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே, அரசியல் உள்நோக்கத்திற்காக, ராகுல் காந்தியை பகடி செய்து யாரோ ஒருவர் இத்தகைய போலிச் செய்தியை தயாரித்துள்ளனர். அதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False