ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டாரா?

அரசியல் | Politics சமூக வலைதளம்

‘’ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும்,’’ என்று ராமதாஸ் கேட்டதைப் போல ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Post Link Archived Link 

Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராமதாஸின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர், ‘’தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டு தமிழக மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆம்பளை தானா என ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும்,’’ என்று கேட்டதுபோல எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, சசிகலாவிடம் இருந்து ஓபிஎஸ் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியதற்கு நான்தான் காரணம், என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சமீபத்தில் பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக, நீங்கள் ஆம்பளையா, என்பதுபோல ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாக கேட்டதாக, குருமூர்த்தி கூறவே, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தன் மீதான சர்ச்சைகள் பற்றி குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். 

OneIndia News LinkHinduTamil News Link Puthiyathalaimurai Link 

இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதுபோல, பாமக நிறுவனர் ராமதாஸ் எதுவும் ஓபிஎஸ் பற்றி விமர்சித்தாரா என தேடினோம். கடந்த நவம்பர் 22ம் தேதிதான் அவர் கடைசியாக ட்விட்டரில் கருத்து கூறியிருந்தார். அதற்குப் பின் உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பிறகு, தற்போது வீடுதிரும்பியுள்ளார். தற்போது மீண்டும் வழக்கம்போல ட்விட்டரில் அரசியல் கருத்து பகிர்ந்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ், குருமூர்த்தி விவகாரத்தில் அவர் எதுவும் கருத்து கூறவில்லை.

ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும். அந்த செய்தி வெளியாகவில்லை. அது மட்டுமின்றி, கடந்த சில நாட்களாகவே, ராமதாஸ் தொடர்பாக, புதுப்புது வதந்திகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படுவது வழக்கமாகியுள்ளது. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி நாம் ஏற்கனவே ஆய்வு செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம்.

FactCrescendo Tamil Link 1FactCrescendo Tamil Link 2

இதுபோலவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் தவறான ஒன்றாகும். ராமதாஸ் கூறாததை கூறியதுபோல பகிர்ந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர். ராமதாஸின் பாமக தற்போது பாஜக – அஇஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எனவே, தனது கூட்டணி கட்சி சார்ந்த ஆட்சியில் துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ்சை ராமதாஸ் விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அவர் கூறியிருந்தால், தற்போதைய அரசியல் பரபரப்பில் அது முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False