ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா: வைரல் வீடியோ உண்மையா?

உலகச் செய்திகள் சர்வதேசம்

‘’ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook Post LinkArchived Link 

தஞ்சை ராஜா என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 22, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உணவு பரிமாறுவதை காண முடிகிறது. வீடியோவின் மேலே, ‘’பதவி வெறி பிடித்து அலையும் நம்மூர் அரசியல்வாதிகளிடையே பதவியை முடித்து விட்ட ஒபாமா 5 நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்யும் காட்சி,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் ஒபாமா மட்டுமின்றி அவரது மனைவி மிச்செல் உள்ளிட்டோரும் உணவு பரிமாறுகின்றனர். 

இதுதவிர, வீடியோவின் பின்னணியில் Armed Forces Retirement என எழுதப்பட்டுள்ளது.

மேற்கண்ட 2 விசயங்களையும் வைத்துப் பார்த்தால், மேற்கண்ட வீடியோ ஏதேனும் பொது நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை வைத்து ஒபாமா ஏதேனும் நிகழ்ச்சியில் இப்படி உணவு பரிமாறினாரா என்ற சந்தேகத்தில் விவரம் தேடினோம். அப்போது அதிபராக இருந்த காலத்தில் ஒபாமா இதுபோல பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உணவு பரிமாறுவதை வழக்கமாகச் செய்திருந்ததை காண முடிந்தது. நிறைய வீடியோக்கள் கிடைத்தாலும், நாம் ஆய்வு செய்யும் வீடியோவின் விவரமும் கிடைத்தது.

இதன்படி, ABC News இந்த வீடியோவை நவம்பர் 2, 2016 அன்று பகிர்ந்துள்ளதை காண முடிகிறது. இதனையே நமது ஃபேஸ்புக் பதிவர் புதிது போல பகிர்ந்து, உண்மை விவரத்தை கூறாமல் மாற்றி எழுதியுள்ளார். ஒபாமா மற்றும் அவரது மனைவி இடம்பெற்றுள்ள இந்த வீடியோவின் பின்னணியில் ‘’Armed Forces Retirement Home‘’ என தெளிவாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த வீடியோவின் லிங்க் விவரம் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியில் ஒபாமா இருந்தபோது, வாஷிங்டன் டிசியில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் இல்லத்தில் முன்னாள் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒபாமா தனது குடும்பத்தினருடன் நேரில் பங்கேற்று உணவு பரிமாறினார். அந்த வீடியோதான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளதும்.

TOI Link BusinessStandard Link TribuneIndia Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) 2016ம் ஆண்டு ஒபாமா ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தரப்பட்ட விருந்தில் பங்கேற்று உணவு பரிமாறினார்.
2) அவர் எந்த நட்சத்திர விடுதியிலும் பணிபுரியவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •