
‘’சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசியபோது எடுத்த அரிய வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
இந்த வீடியோவை உண்மையாலுமே விவேகானந்தர் பேசுவதாக நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
விவேகானந்தர் 1893ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசியது உண்மைதான். அதுபற்றிய புகைப்படங்களே உள்ளன, வீடியோ எதுவும் கிடையாது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
விவேகானந்தரின் அமெரிக்க பயணம் பற்றி பிரத்யேக குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை நாம் ஆய்வு செய்யும் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்த்தோம். அதன்படி, குறிப்பிட்ட வீடியோவில் விவேகானந்தர் போல வேடமிட்ட ஒருவர் உரை நிகழ்த்துவர் உண்மையான விவேகானந்தர் இல்லை என தெளிவாகிறது. அவர் நல்ல முக ஒப்பனை செய்துள்ளார். அத்துடன், மற்றவர்களும் முக ஒப்பனையுடன், தேர்ந்த நடிகர்கள் போல காட்சி அளிக்கின்றனர். இதை வைத்துப் பார்த்தால் எதோ திரைப்பட காட்சி என்பது உறுதியாகிறது.
எனவே, இதன் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோ ஏதேனும் சினிமா படம் தொடர்பானதா என தேடினோம். அப்போது, இது சினிமா படம் ஒன்றின் காட்சிதான் என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.

இதன்படி, 2012ம் ஆண்டு வெளியான Swami Vivekananda எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியாகும். சினிமா படம் என்பதை மறந்து, இதுதான் உண்மையான விவேகானந்தர் என்று கூறி தவறாகச் சித்தரித்துள்ளது, இதன்மூலமாக தெளிவாகிறது. Swami Vivekananda 2012 படத்தின் முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி சினிமா படத்தின் காட்சியை பகிர்ந்து, அதுதான் உண்மையான விவேகானந்தர் என்பது போல வதந்தி பரப்பியது உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False

This I forwarded as though thinking as a true video fromforegone years. This being a false one I sincerely regret and apologise.