‘’மூன்று கண்கள், மூன்று கொம்புகள் கொண்ட காளை மாடு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Video Link

Sudha Annadurai

என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், மூன்று கண்கள் உள்ளது போலவும், மூன்று கொம்புகள் உள்ளது போலவும் ஒரு காளை மாட்டை காட்டுகிறார்கள். இந்த வீடியோவை உண்மை என நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் இதுதொடர்பான கூடுதல் விவரம் தேடிப் பார்த்தோம். அப்போது, இதுகுறித்த வீடியோ ஒன்று கிடைத்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

மேற்கண்ட வீடியோ முதன்முதலாக, 2013ம் ஆண்டு யூ டியுப்பில் பகிரப்பட்டுள்ளது. இதில் நிற்கும் மாடு பற்றி பலவித வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காண கிடைக்கின்றன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த மாடு, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள காலபைரவா கோயிலில் வளர்க்கப்படுகிறது. பக்தர் ஒருவர் இதனை காணிக்கையாகக் கொடுக்க, கோயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. எனினும், இவர்கள் கூறுவதுபோல, இந்த மாட்டிற்கு, மூன்று கண்கள், மூன்று கொம்புகள் என்பதில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளது.

ஆம். மாட்டை நன்கு உற்று கவனித்தால் ஒரு விசயம் புரியும். அதற்கு மூன்று கொம்புகள் உள்ளது உண்மைதான். ஆனால், மூன்றாவது கண் எனக் கூறப்படுவது, அதன் கொம்பின் அடிப்பகுதியாகும். அது சற்று புடைத்து காணப்படுவதால், கண் போல தொலைவில் இருந்து தெரிகிறது. உண்மையில், அது கொம்பின் அடிப்பகுதிதான். நெற்றிப் பகுதி சற்று புடைப்பதாக இருப்பதால், பலரும் 3வது கண் எனக் கூறிவருவதை உணர முடிகிறது.

மேற்கண்ட புகைப்படத்தை பார்த்தாலே தெரியும், அதில் கண் விழி எதுவும் கிடையாது. வெறும் மயிர்மேடுதான் உள்ளது. அது தொலைவில் இருந்து பார்த்தால் கண் போல இருப்பதுதான் இந்த வதந்தி ஏற்பட காரணமாகும்.

இதுபற்றி ஏற்கனவே பலரும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளனர். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, மேற்கண்ட வீடியோவில் கூறப்படும் மாட்டிற்கு மூன்று கண்கள் கிடையாது, 2 கண் மட்டுமே என தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மூன்று கண்கள், மூன்று கொம்புகள் உள்ள காளை மாடு: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer

Result: Mixture