
‘’பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

பலரும் இது உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பான செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம், என்று கூறி வதந்தி பரப்புவதை சில சமூக ஊடக பயனாளர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படி பரப்பப்பட்ட வதந்திதான் இது.
இதுபற்றி சில ஃபேஸ்புக் பதிவாளர்கள் கேலி செய்துள்ளதையும் காண முடிகிறது.
இந்த செய்தி பரவ தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஜானகியின் மகன் ஊடகங்களை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும், இந்த வதந்தி பற்றி ஜானகியின் நெருங்கிய நண்பரும், சக பின்னணி பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, எஸ்.ஜானகியை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரசிகர் ஒருவர் இதுபற்றி சந்தேகம் கேட்டிருக்கிறார். ‘தன்னைப் பற்றி வேண்டுமென்றே சிலர் பல ஆண்டுகளாக இப்படி வதந்தி பரப்பி வருகிறார்கள்,’ என்று அவரிடம் ஜானகி வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த ஆடியோ பதிவு பற்றிய செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, தன்னைப் பற்றி பரவும் வதந்தியை, எஸ்.ஜானகியே மறுத்துள்ளார். வேண்டுமென்றே சிலர் இந்த வதந்தியை பரப்பியுள்ளதாக, தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
