ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு: தினமணியின் வதந்தி

உலகச் செய்திகள் | World News சமூக வலைதளம்

‘’ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு,’’ என்ற தலைப்பில் தினமணி பகிர்ந்த ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Dinamani News LinkArchived Link 2

Dinamani இந்த பதிவை 31, அக்டோபர் 2017 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், தங்களது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில் கூறியுள்ளது மிகவும் தவறான செய்தியாகும். ஒரு முன்னணி ஊடகம் இவ்வாறு எந்த உண்மைத்தன்மையும் பரிசோதிக்காமல் இப்படியான செய்தியை பகிர்ந்து, ஏராளமான சாமானிய மக்களை குழப்பியுள்ளது வியப்பாக உள்ளது.

ஆம், மேற்கண்ட தினமணி செய்தியில் உள்ள புகைப்படத்தை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்ததில், உண்மையில் இது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் செய்ததற்காக, ஆண், பெண் இருவருக்கு கடந்த 2015ம் ஆண்டு 100 சவுக்கடிகள் தரப்பட்டன. இந்த செய்தியில் பகிரப்பட்ட புகைப்படத்தை எடுத்து சவுதியில் பள்ளி மாணவிகளுக்கு கொடுர தண்டனை என தினமணி செய்தியில் பகிர்ந்துள்ளனர்.

Reuters LinkDailymail.co.uk Link 

இதுபற்றிய அசல் வீடியோ ஆதாரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், சவுதி அரேபியாவில் 6 பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. அப்படியான செய்தி எங்கும் வெளியாகவில்லை. நாமும் பலமுறை தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு ஊடகப் போர்வையில் ஒரு போலியான செய்தியை எழுதி மக்களின் மனதில் விஷமம் பரப்பும் வகையில் இந்த செய்தியை தினமணி ஊடகம் பகிர்ந்துள்ளது. இதனை பலரும் தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர். இருந்தும் தினமணி இந்த செய்தியை இதுவரை நீக்கவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சவுதி அரேபியாவில் இப்படி எந்த சம்பவம் நிகழவில்லை. ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியை தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஆறு மாணவிகளின் தலையை வெட்ட உத்தரவிட்ட சவுதி அரசு: தினமணியின் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False