ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் Movies Junction வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர வேண்டாம் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’Movies Junction என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ்ஆப் குரூப்பில் யாரும் சேர வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வை தொடங்கினோம்.  

உண்மை அறிவோம்:

குறிப்பட்ட தகவல் உண்மையா என நாம் தகவல் தேடியபோது, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று தெரியவந்தது. ஆம், இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இந்த தகவல் பற்றி நாம் சென்னை பெருநகர போலீசின் சைபர் கிரைம் பிரிவை (044-23452348, 044-23452350) தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’பொதுவாக, தீவிரவாத இயக்கங்கள், அமைப்புகள் ரகசியமாக மட்டுமே செயல்படுவார்கள். அதிலும், தலைமறைவாகச் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள், இயக்கங்கள் எவ்வாறு இப்படி வெளிப்படையாக வாட்ஸ்ஆப் குரூப் நடத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் சமூக வலைதளங்களில் இதுபோன்று வெளிப்படையாகச் செயல்பட வாய்ப்பில்லை. இது வேண்டுமென்றே பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக பகிரப்படும் வதந்தி,’’ என்று நம்மிடம் தெரிவித்தனர். 

இதே தகவலை நாம் இந்திய சைபர் கிரைம் பிரிவை (1930) தொடர்பு கொண்டும் உறுதிப்படுத்தினோம். 

இதுதவிர, குறிப்பிட்ட தகவல் கடந்த 2016ம் ஆண்டு முதலாகப் பகிரப்படுவதையும் கண்டோம். காரணம் என்னவெனில், அந்த காலக்கட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிக உக்கிரமாக, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்தது. ஆனால், 2019ல் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த தகவல் இன்றளவும் உண்மைத்தன்மை சரிபார்க்காமல் பகிரப்படும் ஒரு வதந்திதான் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

இறுதியாக, https://faq.whatsapp.com/ சென்று வாட்ஸ்ஆப்பில் நாம் ஒரு குழுவில் இருந்து வெளியேற என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தகவல் தேடினோம். அப்போது, ‘’நாம் விரும்பும்பட்சத்தில் எந்த குழுவில் வேண்டுமானாலும் சேரலாம், அதில் இருந்தும் வெளியேறலாம்,’’ என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் தகவலில், அந்த குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் குழுவில் சேர்ந்தால், வெளியேற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அப்படி எந்த நிபந்தனையும் யாரும் வாட்ஸ்ஆப்பை மீறி, பயனாளர்களுக்கு விதிக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

எனவே, அடிப்படை ஆதாரமற்ற இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் Movies Junction வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர வேண்டாம் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING