இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக்கொண்டனரா?

அரசியல் உலகச் செய்திகள்

‘’இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக் கொண்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Link Archived Video Link 
Vasu Dev Krishna

என்பவர் நவம்பர் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம்பெற்றுள்ளது. இதன் மேலே, ‘’ பாகிஸ்தான் துருப்புகள் தீபாவளி பரிசுகளை இந்திய இராணுவத்துடன் பகிர்ந்து கொள்கின்றன. வேசி ஊடகங்கள் இதெல்லாம் காட்ட மனமிருக்காது. #ஜெய்_ஹிந்துஸ்தான்,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள், பரிசுகள் எதுவும் பரிமாறிக் கொண்டனரா என தகவல் தேடினோம். அப்போது தீபாவளியின்போது இனிப்புகள், பரிசுகளை இந்தியா தரப்பில் வழங்கியதாகவும் அதனை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் வெளியான செய்தி விவரம் கிடைத்தது.

IndiaToday News Link Archived Link 

இதன்படி, தீபாவளி அன்று நடக்காத ஒரு சம்பவத்தை செய்தியாக ஃபேஸ்புக்கில் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. இருந்தாலும் அதில் உள்ள வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என சந்தேகத்தின் பேரில் தேடினோம். அப்போது, இந்த வீடியோ ஜனவரி 26, 2015 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள், பரிசுகளை பரிமாறிக் கொண்டபோது எடுக்கப்பட்டதாக, தெரியவந்தது.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

இதே செய்தி மற்ற முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

TheQuint.com Link Rediff.com Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ 2015 இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டதாகும்.
2) 2019 தீபாவளி பண்டிகையின்போது எந்த இனிப்புகளும், பரிசுகளும் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் பகிர்ந்துகொள்ளவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின் படி மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக்கொண்டனரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •